“நம் இந்திய நாடு ஒரு புதிய வரலாற்றைப் படைக்கவிருக்கிறது. இதில், இந்தியராகிய அனைவரும் பங்களித்து நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாடுபட வேண்டும்” என்று சொல்லி, ரூ.1,000 மற்றும் ரூ.500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நவம்பர் 8, 2016 அன்று அறிவித்தார்.

ரகசிய ‘சிப்’!

ரூ.1,000 மற்றும் ரூ.500 ரூபாய் நோட்டுகள் ஒரே இரவில் தடை செய்யப்பட்டு, அதற்கு பதிலாக ரூ.2,000 மற்றும் ரூ.500 மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. `இந்தப் புதிய ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன’ என்றும், `எனவே, இந்த ரூபாய் நோட்டுகளைப் போலியாகத் தயாரிப்பது கடினம்’ என்றும் அப்போது சொல்லப்பட்டது. `புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ரூ.2,000 நோட்டில் ரகசிய ‘சிப்’ வைக்கப்பட்டுள்ளது; ரூ.2,000 நோட்டை ஒருவர் பெருமளவில் பதுக்கிவைத்திருந்தால், அதை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும்’ என்றும் சொல்லப்பட்டது.

அரசையே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்கள்!

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் போலி ரூபாய் நோட்டுகள் புதிதாக உருவாகாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனவா என்று கேட்டால், `இல்லை’ என்பதுதான் நமக்குக் கிடைக்கும் பதில்.

`புதிய நோட்டுகளை போலியாகத் தயாரிக்க முடியாது’ என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லப்பட்டாலும், போலி நோட்டுகளை அச்சடித்து வெளியிடுபவர்களுக்கு அது ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதுபோல் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு 2,000 ரூபாயை போலியாக அச்சடித்து வெளியிட்டு, அரசையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் சிலர்.

அரசு வெளியிட்ட 2,000 ரூபாய் நோட்டு மஜந்தா நிறத்தில் 66 மி.மீ X 166 மி.மீ அளவில் இருக்கும்.

ஆர்.பி.ஐ-யும் என்.சி.ஆர்.பி-யும்

நவம்பர் 2016-க்குப் பிறகு புழக்கத்துக்கு வந்த கள்ள ரூபாய் நோட்டுகள் பற்றி இரண்டு நிறுவனங்கள் தரும் தகவல்களை அதிகார பூர்வமானவையாக எடுத்துக்கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கி, வங்கிகளில் கைப்பற்றப் பட்ட போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையைச் சொல்கிறது. என்.சி.ஆர்.பி நிறுவனம், அமலாக்க நிறுவனங்களால் பறிமுதல் செய்யப் பட்ட தொகை யின் அடிப்படையில் சொல்கிறது.

போலி ரூபாய் எவ்வளவு?

ரிசர்வ் வங்கி தரும் தகவல்கள்படி, 2017-18-ம் நிதியாண்டில் வங்கி அமைப்பில் மொத்தம் 17,929 போலி ரூ.2,000 நோட்டுகள் கண்டறியப்பட்டதாகவும், 2018-19-ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 21,847-ஆக அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது, ரூ.2000 போலி ரூபாய் நோட்டுகள் 21.9% அதிகரித்திருக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அதிகரிக்கும் ரூ.2,000 போலி நோட்டுகள்

புழக்கத்திலுள்ள போலி ரூபாய் நோட்டுகளில் 56 சதவிகிதம் 2,000 ரூபாய் போலி நோட்டுகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016-ம் ஆண்டு முதல் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

குஜராத் மாநிலத்தில், நவம்பர் 2016-ம் ஆண்டு முதல் டிசம்பர் 2018-ம் ஆண்டு வரை ரூ.6.9 கோடி அளவுக்கு 2,000 ரூபாய் போலி நோட்டுகள் கண்டறியப்பட்டு அந்த மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. ரூ.3.5 கோடி அளவுக்கு போலி ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்டு மேற்கு வங்கம் இரண்டாவது இடத்திலும், ரூ.2.8 கோடி அளவுக்கு 2,000 ரூபாய் போலி நோட்டுகள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளன.

போலி ரூ.2,000 நோட்டுகள் புழங்குவதால், ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.2,000 நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இல்லை!

போலி ரூ.2,000 நோட்டுகள் அதிக எண்ணிக்கையில் புழங்குவதால், ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.2,000 நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் தரப்பிலிருந்து அதிகார பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால், ரூ.2,000 நோட்டுகள் புதிதாக அச்சிடப் படுவது வெகுவாகக் குறைந்துவருவதாக ஆர்.டி.ஐ தகவல்கள் சொல்கின்றன.

இந்த நிலையில், போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டறிவது எப்படி என்று சென்னையிலுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டோம். அவர்கள், “போலி நோட்டுகளைக் கண்டறியத் தனி வழிமுறை ஏதும் இல்லை. நம் ரூபாய் நோட்டுகளில் பல தனிப்பட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவற்றை வைத்து அசல் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காணலாம்.

உதாரணமாக, ரூ.2000 நோட்டில் 17 சிறப்புக் குறியீடுகள் உள்ளன. அவற்றைக்கொண்டு போலி ரூபாய் நோட்டுகளை எளிதில் இனம் காணலாம். ரூ.2000 நோட்டுகளைப்போலவே அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் பல தனிச் சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவற்றை வைத்து அசல் ரூபாய் நோட்டுகளைக் கண்டறியலாம்’’ என்றார்கள்.

சிறப்புக் குறியீடுகள் என்னென்ன?

முன்பக்கம்:

1. ஊடுருவிப் பார்க்கக்கூடிய பதிவு. இதில் நோட்டின் மதிப்பு காணப்படும்.

2.  நோட்டின் மதிப்பு எண்ணின் படம்.

3.  நோட்டின் மதிப்பு தேவநாகரி எண்ணில்.

4. மகாத்மா காந்தி படத்தின் நோக்கு நிலை மற்றும் அதன் நிலை மாறுபடுதல்.

5. நிறம்மாறும் ஜன்னல்கொண்ட பாதுகாப்பு நூல். நோட்டைச் சாய்த்தால் இந்த நூலின் நிறம் பச்சையிலிருந்து நீலமாக மாறும்.

6. உத்தரவாதக்கூறு: ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்துடன்கூடிய வாக்குறுதி மற்றும் ஆர்.பி.ஐ-யின் சின்னம் இருக்கும்.

7. மகாத்மா காந்தியின் படமும், எலெக்ட்ரோடைப் வாட்டர் மார்க்குகளும் இருக்கும்.

8. இடதுபுறத்தின் மேல்பக்கத்திலும், வலது புறத்தின் கீழ்ப்பக்கத்திலும் பேனலில் எண் இடமிருந்து வலமாகப் பெரிதாகிக்கொண்டே போகும்.

9. வலதுபுறத்தின் கீழ்ப்பக்கம் நோட்டின் மதிப்பும், ரூபாயின் சின்னமும் நிறமும் மாறும் (பச்சையிலிருந்து நீலமாக) மையால் அச்சிடப்பட்டிருக்கும்.

10. வலது பக்கத்தில் அசோகச் சின்னம் இருக்கும்.

பின்புறம்:

11. நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு.

12. தூய்மை இந்தியா சின்னம் மற்றும் வாசகம்.

13. மொழிகளின் பட்டியல்.

14. நோட்டின் மதிப்பு தேவநாகரி எண்ணில்.

பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக:

இண்டாக்லியோ அல்லது உயர்த்தப்பட்ட வகையில் மகாத்மா காந்தியின் படம், அசோகச் சின்னம், அடையாளச் சின்னம், அத்துடன் ஏழு சாய் கோண பிளீட் கோடுகள் இடது மற்றும் வலது பக்கத்தில் உயர்த்தி அச்சிடப்பட்டிருக்கும்.

மக்களே, உயர் மதிப்பிலான ரூபாயைத் தரும்போதோ, பெறும் போதோ கவனமாக இருப்பது நல்லது!