Published:Updated:

பாரத்நெட் ஒப்பந்தம் ரத்து! - மத்திய அரசு அதிரடி

பாரத்நெட் ஒப்பந்தம் ரத்து
பிரீமியம் ஸ்டோரி
பாரத்நெட் ஒப்பந்தம் ரத்து

முறைகேடு காரணமா?

பாரத்நெட் ஒப்பந்தம் ரத்து! - மத்திய அரசு அதிரடி

முறைகேடு காரணமா?

Published:Updated:
பாரத்நெட் ஒப்பந்தம் ரத்து
பிரீமியம் ஸ்டோரி
பாரத்நெட் ஒப்பந்தம் ரத்து

அனைத்து ஊராட்சிகளுக்கும் அதிவேக இணைய சேவையை வழங்கும் மத்திய அரசின் பாரத்நெட் திட்டத்துக்கான ஒப்பந்தத்தைத் தயார் செய்ததில் விதிமீறல்கள் நடந்ததாக, கடந்த 25.12.2019 தேதியிட்ட ஜூ.வி இதழின் ‘மிஸ்டர் கழுகு’ பகுதியில் முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகின. ‘2,000 கோடி டெண்டர்... ஆட்டுவிக்கும் பெரும்புள்ளி..’ என்ற தலைப்பில் வெளியான அந்தத் தகவல்கள் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கின.

பாரத்நெட் ஒப்பந்தம் ரத்து! - மத்திய அரசு அதிரடி

அதைத் தொடர்ந்து, 06.05.2020 தேதியிட்ட ஜூ.வி இதழின் ‘மிஸ்டர் கழுகு’ பகுதியில், ‘நெட்... ரோடு... கிட் - கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி!’ என்ற தலைப்பில் மேலும் பல அதிச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இந்த விஷயத்தில் கருத்துப் பரிமாற்றங்கள், தொடர் மோதல்கள் வெடிக்க, ஜூன் 26-ம் தேதி பாரத் நெட் ஒப்பந்தத்தையே ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்திய அரசின் 1,950 கோடி ரூபாய் பாரத்நெட் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த 2017-ல் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக விதிமுறைகள் மீறப்பட்டன என்று புகார் எழுந்தது. மேலும், விதிமுறை மீறல்களுக்கு ஒத்துழைக்காத அன்றைய தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு வுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து அவர் விருப்ப ஓய்வில் செல்வதற்குக் கடிதம் கொடுத்த நிலையில், அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அவரது பதவிக்கு வேறொரு ஜூனியர் அதிகாரி நியமிக்கப்பட்டார். இவற்றையெல்லாம் அவ்வப்போது ஜூனியர் விகடன் இதழில் வெளியிட்டுவந்தோம்.

பாரத்நெட் ஒப்பந்தம் ரத்து! - மத்திய அரசு அதிரடி

இதற்கிடையே ஒப்பந்த முறைகேடுகள் பற்றி அறப்போர் இயக்கம் மத்திய அரசுக்கு புகார் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, ‘குறிப்பிட்ட பெரிய நிறுவனங்கள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் ஒப்பந்த விதிகள் இருக்கக் கூடாது; அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்; ‘மேக் இன் இந்தியா’ கொள்கை அடிப்படையில் ஒப்பந்தம் அமைய வேண்டும்’ என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் நிபந்தனைகள் விதித்தது.

‘பாரத்நெட் ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கிறது. இதற்குக் காரணமான முதலமைச்சர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று தி.மு.க தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘ஒப்பந்தமே விடப்படாத நிலையில், முறைகேடு நடக்க முகாந்திரம் இல்லை’ என்று உத்தரவிட்டது. தி.மு.க-வும் வழக்கை வாபஸ் பெற்றது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “தி.மு.க-வின் பொய்ப் புகாரை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களுக்கு நன்மையளிக்கும் இந்தத் திட்டத்தைச் சிலர் முடக்க நினைத்தனர். அது நடக்காது, விரைவில் ஒப்பந்தம் விடப்படும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 23-ம் தேதி காணொளி மூலம் அறப்போர் இயக்கத்தினரிடம் விசாரணை நடத்தியது மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம். தொடர்ந்து கடந்த ஜூன் 26-ம் தேதி, ‘ஒப்பந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப் படவில்லை, டெண்டரை ரத்து செய்யவும்’ என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை, தமிழக தொலைத் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாரத்நெட் ஒப்பந்தம் ரத்து! - மத்திய அரசு அதிரடி

இதையடுத்து மீண்டும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தொடர்புகொண்டு இது குறித்துக் கேட்டோம். “ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை. `கூடுதல் நிபந்தனைகளுடன் புதிதாக ஒப்பந்தம் விட வேண்டும்’ என்று பரிந்துரைத் துள்ளார்கள். இதைத்தான் தி.மு.க, அறப்போர் இயக்கத்தினர் ‘ஒப்பந்தம் ரத்து’ என்று பிரசாரம் செய்கிறார்கள்’’ என்றவரிடம், “தமிழக அரசு அறிவித்த ஒப்பந்த விதிமுறைகள் சரியில்லை என்பதால்தானே மத்திய அரசு இப்படி அறிவித்திருக்கிறது?” என்று கேட்டோம். அதற்கு அவர், “அப்படி இல்லை. ‘மேக் இன் இந்தியா’ கொள்கையின்படிதான் ஒப்பந்தத்தை வரையறை செய்திருந்தோம். அதில் இன்னும் சில நிபந்தனைகளைச் சேர்க்கும்படி கூறியுள்ளார்கள். இது மத்திய அரசின் திட்டம் என்பதால், அவர்களிடம் யார் புகார் செய்தாலும் அதை விசாரிப்பார்கள். அப்படித்தான் அறப்போர் இயக்கம் கூறிய புகாரை விசாரித்தனர்’’ என்றவரிடம் மீண்டும் குறுக்கிட்டு, “அப்படியென்றால், இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை என்கிறீர்களா?’’ என்று கேட்டோம்.

அதற்கும் அமைச்சர், “நிச்சயமாக இல்லை. பாரத்நெட் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். எங்களுக்கு ஏற்படும் நல்ல பெயரைத் தடுக்கவே இது போன்ற பொய்ப் புகார்கள் கிளப்பப்படுகின்றன. எனவே, ஒரு மாத காலத்தில் மத்திய அரசு உருவாக்கித்தரும் விதிகளை உள்ளடக்கி புதிய வழிகாட்டுதலில் மறு ஒப்பந்தம் விடப்படும். தகுதியான நிறுவனங்கள் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism