Published:Updated:

`எங்கள் பாஸ்போர்ட்டுகளில் உங்கள் தாமரைச் சின்னம்!'- மக்களவையில் கொதித்த கேரள எம்.பி.

தேசிய சின்னங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும். அனைத்துச் சின்னங்களும் இந்தியாவை அடையாளப்படுத்தக் கூடியதாகவே இருக்கும்.

பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்

இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேறிவிட்டது. இதுதொடர்பான விவாதங்கள், போராட்டங்கள் ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தாலும்

தாமரை
தாமரை

பாஸ்போர்ட்டுகளில் பா.ஜ.க-வின் தேர்தல் சின்னமான தாமரை இடம்பெற்றிருக்கும் தகவல் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் எம்.கே.ராகவன் ஜீரோ ஹவரில் பேசுகையில், ``கோழிக்கோட்டில் வழங்கப்படும் புதிய பாஸ்போர்ட்டுகளில் பா.ஜ.க-வின் தாமரைச் சின்னம் இடம்பெற்றிருப்பதை பத்திரிகை ஒன்று முக்கியச் செய்தியாக வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் `காவிமயமாக்கும் முயற்சி’ என்றும் அந்த ஏடு விமர்சித்துள்ளது” என்றார். இதுதொடர்பாக, மக்களவையில் அவர் கேள்வியும் எழுப்பினார்.

எம்.கே.ராகவன்
எம்.கே.ராகவன்

எம்.கே.ராகவனின் கேள்விக்குப் பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், ``தாமரை மலர், நமது நாட்டின் தேசியச் சின்னம். போலி பாஸ்போர்ட்டுகளை அடையாளம் காணவும் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றவர்,

``இனி வரும் காலங்களில் தேசிய சின்னங்கள் அனைத்தும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும். அனைத்துச் சின்னங்களும் இந்தியாவை அடையாளப்படுத்தக்கூடியதாகவே இருக்கும்” என்றும் விளக்கமளித்துள்ளார்.

ரவீஷ்குமார்
ரவீஷ்குமார்

பாஸ்போர்ட்டுகளில் தாமரைச் சின்னம் இடம்பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ``பெண்களின் பாதுகாப்பைவிட பாஸ்போர்ட்டுகளின் பாதுகாப்புதான் முக்கியமா?' `ஆபரேஷன் லோட்டஸ் ஸ்டார்ட்ஸ்', `தாமரையை வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள், வீடு பாதுகாப்பாக இருக்கும்' என்பன போன்ற கமென்டுகளால் பா.ஜ.க-வை வறுத்தெடுக்கின்றனர் நெட்டிசன்கள்.

இந்திய டிரெண்டிங்கிலும் `லோட்டஸ்' என்ற ஹேஷ்டேக் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.