அரசியல்
அலசல்
Published:Updated:

கேபினட் அக்கப்போர்!

கேபினட் அக்கப்போர்!
பிரீமியம் ஸ்டோரி
News
கேபினட் அக்கப்போர்!

தமிழ்க்குரலன், ஓவியம்: சுதிர்

காவிக் கட்சியின் தலைவரான மாஜி காக்கிக்கும், அணில் அமைச்சருக்கும் இடையே மோதல் தூள் பறக்கிறது. வெளியே சந்தி சிரிக்கிற அளவுக்கு மோதிக்கொண்டாலும், உள்ளே அட்டகாசமான உடன்பாடு நீடிக்கிறதாம். அணில் அமைச்சர் மீதான கவனத்தைப் பெருக்கவும், கட்சிக்குள் அவரை வலுவாகக் காலூன்றவைக்கவும் திட்டமிட்டு இந்த வியூகம் வகுக்கப்படுவதாகச் சந்தேகம் கிளம்பியிருக்கிறது. சீனியர் நிர்வாகிகள், முதன்மையானவர் கவனத்துக்கு இதைக் கொண்டுசெல்ல, ‘நிச்சயம் அப்படியெல்லாம் இருக்காது’ என்றாராம் உறுதியாக. ‘பட்ட பிறகே உணரட்டும்…’ எனத் தங்களுக்குள் குமைந்துகொள்கிறார்கள் அந்த சீனியர் நிர்வாகிகள்.

முதன்மையானவருக்கு நெருக்கமான இடத்தில் யார் இருப்பது என்கிற போட்டி, அமைச்சர்கள் மத்தியில் எப்போதும் இருக்கும். ஆட்சிக்கு வந்த சில காலம், மூத்த அமைச்சர் முதன்மையானவரின் அருகிலேயே இருந்தார். பிறகு அவர் புறந்தள்ளப்பட்டு இனிஷியல் அமைச்சர் ஒட்டிக்கொண்டார். அவருக்கும், புன்னகை அமைச்சருக்கும் அடுத்த போட்டி உருவானது. இப்போது இருவரையும் ஓரங்கட்டி, மீசைக்கார மினிஸ்டர் முதன்மையானவருக்கு அருகிலேயே வலம்வருகிறார். கட்சி குறித்தும், நிர்வாகிகள் குறித்தும் அவர் சொல்லும் விவரங்கள்தான் இப்போது எடுபடுகின்றனவாம்.

கேபினட் அக்கப்போர்!

கடந்த ஆண்டைப்போல் பொங்கல் பொருள்கள் வழங்குகிற திட்டத்தில் தமிழக அரசு இல்லையாம். ‘பணமாகக் கொடுத்துவிடுவதே சிறப்பு’ என சீனியர் அதிகாரிகள் சொல்வதால், அப்படியே செய்ய நினைக்கிறதாம் அரசு. அதனால் ‘சக்கர’ அமைச்சருக்கு ரொம்பவே சங்கடமாம். ‘இந்த முறை நிச்சயம் எந்தக் குறையும் இல்லாமல் நான் பொங்கல் பொருள்கள் வழங்கிக் காட்டுகிறேன்’ என முதன்மையானவரிடம் சொன்ன பிறகும், அவர்மீது நம்பிக்கை வரவில்லையாம். தன் பகுதியின் சீனியர் அமைச்சர், தனக்கு எதிராக விளையாடிவிட்டாரோ என்கிற கவலையும் அந்த அமைச்சரைச் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது!