Published:Updated:

விஜய்க்கு அபராதம் : `நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும்!' - சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

விஜய்
விஜய்

நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதி்க்க விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 1 லட்சம் ரூபாய் அபராதத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வார காலத்தில் செலுத்த விஜய்க்கு ஆணை பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2012-ல் நடிகர் விஜய் இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்தநிலையில், நடிகர் விஜய் தான் இறக்குமதி செய்திருக்கும் சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இன்று அந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய்யின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், "சமூகநீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல... கட்டாயப் பங்களிப்பு" என்று காட்டமாகக் கூறி, நடிகர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து அவரது மனுவைத் தள்ளுபடி செய்தனர்.  மேலும், நடிகர் விஜய்க்கு 1,00,000 ரூபாய் அபராதம் விதித்துள்ள நீதிபதிகள் இரண்டு வாரத்தில் அபராதத் தொகையை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்றும் கால அவகாசம் அளித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு