அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

டி.ஒய்.சந்திரசூட் யார்?

டி.ஒய்.சந்திரசூட்
பிரீமியம் ஸ்டோரி
News
டி.ஒய்.சந்திரசூட்

பல்வேறு நாடுகளின் சட்டப் பல்கலைக்கழகங்களில், சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் எனப்படும் உதய் உமேஷ் லலித் பதவிக்காலம், நவம்பர் 8-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் எனப்படும் தனஞ்ஜெய யஷ்வந்த் சந்திரசூட் 2022, நவம்பர் 9-ம் தேதி பதவியேற்கவிருக்கிறார்!

* இவரின் தந்தை யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீண்டகாலம் பணியாற்றிய பெருமை கொண்டவர்.

* உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி.

* டி.ஒய்.சந்திரசூட் ஓர் இசைப்பிரியர். கல்லூரிக் காலத்தில் பாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

* 1959-ம் ஆண்டு, நவம்பர் 11-ம் தேதி மும்பையில் பிறந்தார்.

* இவர், பெற்றோருக்கு ஒரே மகன்.

டி.ஒய்.சந்திரசூட் யார்?

* `சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று பெண்கள் வழிபடலாம்’ என்ற தீர்ப்பை வழங்கியவர் இவர். அதற்காக, சமூக வலைதளங்களில் அவருக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

* டெல்லி பல்கலைக் கழகத்தில் எல்.எல்.பி பட்டம் பெற்றார்.

* மும்பையில் பள்ளிப் படிப்பை முடித்து, டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில், 1979-ம் ஆண்டு பொருளாதாரம், கணிதம் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

* ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சட்டத்தில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்றார்.

* அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

* 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம்!

* 2024, நவம்பர் 10-ம் தேதி வரை தலைமை நீதிபதிப் பதவியில் இருப்பார்.

* மார்ச் 2000 முதல் அக்டோபர் 2013 வரை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.

* 2021, ஏப்ரல் 24-ம் தேதி முதல், உயர் நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதிகளையும், உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளையும் பரிந்துரை செய்யும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் உறுப்பினர்.

டி.ஒய்.சந்திரசூட் யார்?

* பல்வேறு நாடுகளின் சட்டப் பல்கலைக்கழகங்களில், சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

* தந்தை ஒய்.வி.சந்திரசூட். தாய் பிரபா சந்திரசூட், இவர் ஒரு கர்நாடக இசைக்கலைஞர்.

* அயோத்தி வழக்கு உட்பட, பல முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகளில் அங்கம் வகித்தவர்.

* `ஓரினச் சேர்க்கை குற்றமில்லை’ என்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்விலும் இவர் இடம்பெற்றிருந்தார். `ராணுவத்தில் பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட வேண்டும்’ என்பதும் இவர் வழங்கிய தீர்ப்புகளில் முக்கியமானது.

* 2013, அக்டோபர் 31 முதல் அலகாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.

* டி.ஒய்.சந்திரசூட்டின் மனைவி கல்பனா தாஸ். இவர்களுக்கு சிந்தன் சந்திரசூட், அபிநவ் சந்திரசூட் என இரண்டு மகன்கள். இருவருமே வழக்கறிஞர்கள்.

* 7 ஆண்டுகள், 139 நாள்கள் தலைமை நீதிபதியாகத் தந்தை யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட் பதவி வகித்தார். மகன் டி.ஒய்.சந்திரசூட் 2 ஆண்டுகளுக்கு மேல் தலைமை நீதிபதியாகப் பதவி வகிப்பார்.

டி.ஒய்.சந்திரசூட் யார்?

தந்தையின் தீர்ப்பை மாற்றிய தனயன்!

ஐ.பி.சி 497 நீக்கப்பட வேண்டும் என்ற வழக்கில், ‘தவறான உறவு வைத்துக்கொள்பவர்கள் தண்டிக்கப்பட்டால்தான் சமூகத்தின் நலன் காக்கப்படும்’ என்று, பிரிவு 497-ஐ நீக்க மறுத்து 1985-ம் ஆண்டு ஒய்.வி.சந்திரசூட் தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பை மாற்றி, ‘திருமண உறவுக்கு வெளியே பாலியல் உறவு வைத்துக்கொள்வது தவறு கிடையாது. மனைவி என்பவர் கணவரின் சொத்து அல்ல. எனவே, பிரிவு 497-ஐ ரத்து செய்கிறோம்’ என்று டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள்கொண்ட அமர்வு 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது!