Published:Updated:

இலங்கையில் சீன உளவுக் கப்பல்! - தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவுக்கு அச்சுறுத்தலா?

ரணில் விக்ரமசிங்க
பிரீமியம் ஸ்டோரி
ரணில் விக்ரமசிங்க

செயற்கைக்கோள் கட்டுப்பாடுகள் குறித்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயணித்து ஆராய்ச்சி செய்வதுதான் யுவான் வாங் கப்பலின் நோக்கம் என்று சீனத் தரப்பிலிருந்து சொல்லப்பட் டிருக்கிறது

இலங்கையில் சீன உளவுக் கப்பல்! - தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவுக்கு அச்சுறுத்தலா?

செயற்கைக்கோள் கட்டுப்பாடுகள் குறித்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயணித்து ஆராய்ச்சி செய்வதுதான் யுவான் வாங் கப்பலின் நோக்கம் என்று சீனத் தரப்பிலிருந்து சொல்லப்பட் டிருக்கிறது

Published:Updated:
ரணில் விக்ரமசிங்க
பிரீமியம் ஸ்டோரி
ரணில் விக்ரமசிங்க

சீனாவின் `யுவான் வாங் 5’ என்ற உளவுக் கப்பல் இலங்கைக்கு வரவிருக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எட்டு நாள்களுக்கு அந்தக் கப்பலை நிறுத்திவைக்க இலங்கை அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்த சீனக் கப்பலால், இந்தியாவுக்கு என்ன ஆபத்து... இலங்கை - இந்தியா உறவில் விரிசல் உண்டாகுமா?

உளவுக் கப்பல்!

கடந்த மாதமே சீனாவின் உளவுக் கப்பல் இலங்கைக் கடற்பரப்புக்கு வரும் என்ற தகவல்கள் வெளியாகின. இது குறித்து அப்போதே கவலை தெரிவித்திருந்தது இந்தியா. அப்போது இந்தத் தகவலைத் திட்டவட்டமாக மறுத்த இலங்கை, இப்போது அந்தக் கப்பலுக்கு அனுமதி வழங்கியிருப் பதை ஒப்புக்கொண்டிருக்கிறது. ஜூலை 30 அன்று இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நளின் ஹெராத், ``சீனாவின் `யுவான் வாங்’ ஆராய்ச்சிக் கப்பல் ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகிறது. அந்தக் கப்பலை 17-ம் தேதி வரை அங்கேயே நிறுத்திவைக்க இலங்கை அரசு அனு மதி அளித்திருக்கிறது. அங்கிருந்து செயற்கைக்கோள் கட்டுப்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகளை இந்தக் கப்பல் மேற்கொள்ளும்’’ என்று கூறினார்.

இலங்கையில் சீன உளவுக் கப்பல்! - தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவுக்கு அச்சுறுத்தலா?

செயற்கைக்கோள் கட்டுப்பாடுகள் குறித்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயணித்து ஆராய்ச்சி செய்வதுதான் யுவான் வாங் கப்பலின் நோக்கம் என்று சீனத் தரப்பிலிருந்து சொல்லப்பட் டிருக்கிறது. ஆனால், 750 கி.மீ தூரத்திலுள்ள இடங்களை, நின்ற இடத்திலிருந்தே `யுவான் வாங்’ கப்பலால் உளவு பார்க்க முடியும். அந்த வகையில், அம்பாந்தோட்டையிலிருந்து, தமிழ்நாட்டிலுள்ள கூடங்குளம், கல்பாக்கம் அணு மின் நிலையங்களை சீனக் கப்பல் உளவு பார்க்க வாய்ப்பிருக்கிறது. மேலும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவிலுள்ள ஆறு முக்கியத் துறைமுகங் களையும் அந்தக் கப்பல் உளவு பார்க்கலாம் என்கின்றனர். இதனால், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென மிகுந்த கவலையிலிருக் கிறது மத்திய அரசு. தென் மாநிலங்களை கவன மாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியிருப் பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்து இலங்கையுடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவந்தாலும், இந்த விவகாரத்தில் வெளிப்படையாக இந்தியா எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இலங்கையில் சீன உளவுக் கப்பல்! - தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவுக்கு அச்சுறுத்தலா?

இரு நாடுகள் உறவில் விரிசல்?

இந்த விவகாரம் குறித்து இலங்கையில் வெளியாகும் `தமிழன்’ நாளிதழின் ஆசிரியர் சிவா ராமசாமியிடம் பேசினோம். ``சீனக் கப்பல் விவகாரம் தொடர்பாக இந்தியத் தூதுவர் இலங்கை அரசிடம் பேசியதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்தன. இது தொடர்பாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், `இந்தியா ஏற்கெனவே பல உதவிகளைச் செய்துவிட்டது. தெற்காசியா முழுவதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால், இனி இந்தியா நமக்குக் கடனுதவிகளை வழங்காது. இருந்தாலும், இந்தியாவின் உதவிகளை மறக்க முடியாது. சீனாவையும் புறந்தள்ளிவிட முடியாது’ என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க பேசியிருக்கிறார்.

சிங்களக் கட்சிகளும் சீனாவுடன் நல்லுறவு வைத்துக்கொள்வதையே விரும்புகின்றன. `சீனா அழுத்தம் கொடுத்தால், சர்வதேச நாணய நிதியத்திட மிருந்து உதவி கிடைக்கும் என்பதால், அவர்களுக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும்’ என்பது சிங்களக் கட்சிகளின் கருத்து’’ என்றவரிடம், `இந்த முடிவு ரணில் அதிபராவதற்கு முன்பே எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி உலவுகிறதே?’ என்று கேட்டோம்.

``கப்பலை அனுமதிக்கும் முடிவு, ரணில் அதிபராவதற்கு முன்பு எடுக்கப்பட்டதுதான். ஆனால், தற்போது அதிகாரத்திலிருக்கும் அவர் சீனாவிடம் பேசி, அந்த முடிவை மறுபரிசீலனை செய்யத் தயாராக இல்லை. `இது நான் வருவதற்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு’ என்று சொல்லித் தப்பித்துக்கொள்ளவே நினைக்கிறார். ஏற்கெனவே மகிந்த ராஜபக்சே ஆட்சியில், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் ராணுவக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருவதற்கு அனுமதியளித்தது இலங்கை. அதன் பிறகு நடந்த தேர்தலில், இந்தியாவின் தலையீட்டால் மகிந்த கட்சி தோல்வியுற்று, ஆட்சி மாற்றம் நடந்தது. தற்போது மீண்டும் அதே போன்றதொரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த முறை, இந்தியா இலங்கைக்குச் செய்துவரும் உதவிகளை முற்றிலுமாக நிறுத்திவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் உண்டாகும்.

சிவா ராமசாமி
சிவா ராமசாமி

பொருளாதார நெருக்கடி யில், இலங்கைக்குப் பெரும் உதவிகளைச் செய்தது இந்தியா மட்டுமே. உணவு கொடுத்தவன் கையையே கடிப்பது போன்ற தவறைத்தான் இலங்கை செய்துகொண்டிருக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருக்கிறது சீனா. அந்தத் துறைமுகத்தில் சீனாவின் கப்பல் வந்து நிற்பது, இந்தியாவின் தேசியப் பாது காப்புக்கு மட்டுமல்ல... இலங்கையின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்தான். எரிபொருள் நிரப்புவதற்கு இரண்டு நாள்கள் போதுமானவை. ஒரு வார காலம் கப்பல் நிற்பது ஏன்... செயற்கைக்கோள் ஆராய்ச்சி என்கிறார்கள். ஆனால் சீனக் கப்பல், இந்தியாவை உளவு பார்க்க வருவதாகவே தோன்றுகிறது’’ என்றார் சிவா ராமசாமி.

உதவிக்கரம் நீட்டிய இந்தியாவை முதுகில் குத்த நினைக்கிறது இலங்கை. தைவான், தென்கொரிய எல்லைகளில் அமெரிக்க ராணுவக் கப்பல்கள் உலவும்போது, கடுமையான எச்சரிக்கைகளை விடுத்த சீனா, இந்திய எல்லை யில் உளவுக் கப்பலை நிறுத்த முயல்வது அத்துமீறல். இந்த விவகாரத்தில் மௌனம் காக்காமல், தேசப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் மத்திய அரசு!