Published:Updated:

`பொது வீதியில் இனி குப்பையை வீச முடியாது!'- கோவை மாநகராட்சியின் `பூக்கோலம்' பிளான்

பொது இடங்களில் குப்பை வீசப்படுவதைத் தடுக்கும்விதமாக, கோவை மாநகராட்சி தரப்பில் பூக்கோலம் வரையப்படுகிறது.

பூக்கோலம்
பூக்கோலம்

பொது இடங்களில் குப்பை வீசக்கூடாது என்று பல இடங்களில் அறிவிப்புகள் எழுதப்பட்டிருக்கும். ஆனால், அந்த அறிவிப்பு வாசகம் தெரியாத வகையில் குப்பைகளால் நிரப்புவது வாடிக்கையாகிவிட்டது.

பூக்கோலம்
பூக்கோலம்

ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும், கோவையும் இதற்கு விதிவிலக்கல்ல. குப்பைத் தொட்டிகள் இருந்தாலும், கோவையில் பல இடங்களில் குப்பைக் குவியல்களைக் காணலாம்.

இந்நிலையில், கோவை மாநகராட்சி அதிகாரிகள் இந்தப் பிரச்னையைச் சற்று வித்தியாசமாக அணுகியுள்ளனர். அதன்படி, பொது இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றி, சாணம் தெளித்து அதில் பூக்கோலம் போட்டுள்ளனர்.

Vikatan

தியாகி குமரன் வீதி, அரசு மருத்துவமனை என்று மாநகரின் பல சாலைகளை இந்தப் பூக்கோலம் அலங்கரித்துள்ளது. மேலும், அந்தக் கோலத்தின் அருகே, `இங்கு குப்பை போடாதீர்கள்.. மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்', `தூய்மை இந்தியா' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில், அந்தந்தப் பகுதிக்குட்பட்ட துப்புரவுப் பணியாளர்களே ஈடுபட்டுள்ளனர்.

பூக்கோலம்
பூக்கோலம்

மாநகராட்சியின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

``மாநகரை தூய்மையாக வைத்துக்கொள்ள, பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் கோவை விரைவில் தூய்மை நகராக மாறிவிடும்" என்று மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.