Published:Updated:

“இந்தத் தலைமுறையினரின் வேகம் மிக அதிகம்!”

நல்லதம்பி கலைச்செல்வி
பிரீமியம் ஸ்டோரி
நல்லதம்பி கலைச்செல்வி

சி.எஸ்.ஐ.ஆரின் முதல் பெண் தலைமை இயக்குநர் நல்லதம்பி கலைச்செல்வி

“இந்தத் தலைமுறையினரின் வேகம் மிக அதிகம்!”

சி.எஸ்.ஐ.ஆரின் முதல் பெண் தலைமை இயக்குநர் நல்லதம்பி கலைச்செல்வி

Published:Updated:
நல்லதம்பி கலைச்செல்வி
பிரீமியம் ஸ்டோரி
நல்லதம்பி கலைச்செல்வி

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இயங்கிவரும் 37 ஆராய்ச்சி நிறுவனங் களின் தலைமையிடமான, புதுடெல்லி யில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் (Council of Scientific and Industrial Research - CSIR) தலைமை இயக்குநர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி.

80 ஆண்டுக்கால சி.எஸ்.ஐ.ஆரின் வரலாற் றில் தலைமை இயக்குநராக ஒரு பெண் பணியமர்த்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வக இயக்கு நராக இதுவரை பணியாற்றி வந்த கலைச்செல்வி, தற்போது இந்தியாவின் மிகப்பெரிய அறிவியல் நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

ஒரு பேராசிரியராக இருந்து ஆராய்ச்சி யாளரான கதையில் இருந்து பேச ஆரம் பித்தார் கலைச்செல்வி... ``கல்லூரியில் பேராசிரியராக இருந்தபோது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வகுப்பறை யில் மாணவர்களுக்குப் பாடமாகச் சொன்னதை, அடுத்தகட்டமாக ஆய்வகத்தில் நேரடியாகச் செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். பேராசிரியராக இருந்தபோது கிடைத்த மகிழ்ச்சியைவிட இரட்டிப்பு மகிழ்ச்சி ஆராய்ச்சியாளராக எனக்குக் கிடைத்தது. 1997-ல் காரைக்குடி, சிக்ரியில் விஞ்ஞானியாகச் சேர்ந்ததில் இருந்து, லித்தியம் அயர்ன் பேட்டரி தொடர்பான ஆராய்ச்சியில் மட்டும்தான் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன். ஓரளவுக்கு அதில் எனக்குப் புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் லித்தியம் அயர்ன் பேட்டரி தயாரிப்புக்கான பணிகளில் என்னால் முடிந்த ஆய்வுகளையும் உதவிகளையும் பங்களித்துக்கொண்டிருக்கிறேன்’’ என்றவர், அதன் பயன்பாடுகள் பற்றிச் சொன்னார்.

நல்லதம்பி கலைச்செல்வி
நல்லதம்பி கலைச்செல்வி

‘`இந்தியாவில் இப்போது இ-வாகனங்களின் வருகையால் லித்தியம் அயர்ன் பேட்டரிகளின் தேவை மிக அதிகமாகியிருக்கிறது. வரும் காலங்களில் அலைபேசி முதல் வாகனங்கள் வரை இது இன்னும் அவசியமாகும். லித்தியம் அயர்ன் பேட்டரி தயாரிக்க, இந்தியாவில் தற்போதுதான் சில நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றன. ஓரிரு ஆண்டுகளில் சந்தைக்கு வரவிருக்கும் அந்த பேட்டரிகளின் பயன்பாடு பரவலாகும்.

லித்தியம் பேட்டரியின் மூலமாக இ-வாகனங்களை இயக்குவது சாத்தியம் என்பது மற்ற நாடுகளில் எல்லாம் நிரூபணமாகி விட்டது. நம் நாட்டில் தற்போதுதான் நிரூபணமாகிவருகிறது. அதன் தேவை வரும் காலங்களில் பன்மடங்காக உயரும். அதை உணர்ந்து அரசும், சி.எஸ்.ஐ.ஆரும் அதற்கான முதலீடுகளை அதிகரித்திருக்கின்றன. நம் நாட்டின் தட்வெட்பம் மற்றும் சாலைகளுக்கு ஏற்ப அதைத் தயாரிக்க வேண்டும் என்ற கவனத்துடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றவரிடம், இ-வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் குறித்துக் கேட்டோம்.

``எந்த ஒரு தொழில்நுட்பமும், அது தோன்றுகின்ற காலத்தில் அது குறித்து முழுமையான விழிப்புணர்வும் புரிந்துணர்வும் இல்லாத காரணத்தால் அதன் மீது அச்சம் ஏற்படும். மற்ற நாடுகளில் இ-வாகனங்களை பயன்படுத்துவது குறித்த நம்பிக்கையும் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. நம் நாட்டிலும் லித்தியம் பேட்டரி குறித்த தவறான புரிதலும் அச்சமும் விரைவில் சரியாக்கப்படும்’’ என்றவர், அறிவியல், தொழில்நுட்பத்துறையில் தற்போது பெண் களின் செயல்பாடுகள் பற்றி பகிர்ந்து கொண்டார்.

‘`சமீப காலங்களில் அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனைகள் புரிந்துகொண்டிருக் கிறார்கள். அந்த வகையில் அறிவியல் துறை யிலும் அவர்கள் எண்ணிக்கை அதிகரித் திருக்கிறது. அவர்களுக்கான அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் ஆண்கள், பெண்களுக்கான வாய்ப்புகள் சமமாக வழங்கப்படுகின்றன. ஆனால், குடும்பத்துக்கும் சம முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால் பெண் கொடுக்க வேண்டிய உழைப்பு அதிகமாக இருக்கிறது. அதைச் சரியாகக் கையாள்பவர்கள் வெற்றியாளர்கள் ஆகிறார்கள். இன்னொரு பக்கம், பெண்கள் மீது குடும்பப் பொறுப்புகள் அதிகமாக வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, அவர்கள் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தும் வகையில் குடும்பங்கள் அவர் களுக்குக் கைகொடுக்க வேண்டும்’’ என்று சொல்லும் கலைச்செல்வி மாணவ சமுதாயத் திடம் தொடர்ந்து பழகிவருபவர். அவர் களிடம் தான் கவனித்த தலைமுறை மாற்றம் பற்றிக் குறிப்பிட்டார்.

‘`பொதுவாக, இன்றைய மாணவர்களுக்குப் பொறுப்பில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு தலைமுறை மாணவர் களும் தங்களது முந்தைய தலைமுறை மாணவர்களைவிட அதிக வேகம் எடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இப்போதைய இளம் தலைமுறையினர் ஓடிக்கொண் டிருக்கும் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவர்களுடன் இணைந்து பயணிக்க நாம்தான் நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் நம்மைவிட பொறுப்பு மிக்கவர்களாக உருவாக இருப்பவர்கள்’’ என்று இளம் எனர்ஜிகளுக்கு பூங்கொத்து கொடுத் தவரிடம்,

‘ஆராய்ச்சியாளர்கள் என்றாலே படங் களில் எல்லாம் சீரியஸானவர்களாகக் காட்டுவார்கள். உங்கள் பொழுது போக்குகள் என்ன?’ என்றோம்.

``எப்போதும் கடுமையாக இருக்கும் முகம், யாருடனும் பழகாத குணம், ஆண்கள் என்றால் நீளமாக வளர்ந்த கேசம் என இப்படித்தான் விஞ்ஞானிகளை, ஆராய்ச்சியாளர்களை வரையறை செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால், நான் முற்றிலும் மாறுபட்டவள். தமிழ் இலக்கியத்தின் மீது எனக்கு மிகவும் ஆர்வம். நிறைய புத்தகங்கள் வாசிப்பேன். அறிவியல் மேடைகள் மட்டுமல்ல, இலக்கிய மேடைகளிலும் விவாதங்களில் பங்கேற்பேன். பயண நேரங்களில் இசை தான் தோழமை. என்னைச் சுற்றியுள்ள எல்லோருடனும் நெருங்கிப் பேசுவேன். இவையெல்லாம்தான் என்னை இலகுவாக, புத்துணர்வாக வைத்திருக்கின்றன’’ என்றவர், தமிழ் வழியில் படிக்கும் பிள்ளைகளுக்கான நம்பிக்கை வார்த்தைகளைப் பகிர்ந்தார்.

 லித்தியம் அயர்ன் பேட்டரி கூடத்தில்...
லித்தியம் அயர்ன் பேட்டரி கூடத்தில்...

``தமிழ் வழியில் படிக்கும், சாதிக்கத் துடிக்கும் பிள்ளைகள் என் வார்த்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். நான் தமிழ் வழியில் படித்தவள். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவேன். எல்லாம் பயிற்சிதான். மேலும், தமிழ்மொழியில் படித்து அறிவியல் முதல் தொழில்நுட்பம் வரை அனைத் தையும் சிறப்பாக உள்வாங்கிக்கொள்ள முடியும். அந்தந்தத் துறைகளில் சாதிக்க முடியும். அறிவு, உழைப்பு, முயற்சி இவையெல்லாம்தான் முக்கியம்... மொழி ஒரு கருவிதான்’’ என்கிறார்.

சி.எஸ்.ஐ.ஆரின் தலைமை இயக்குநராக எதிர்காலத் திட்டம் பற்றி கலைச்செல்வி சொன்ன போது, ``இந்திய நாடு தற்போது 500 ஜிகாவாட் அளவுக்கு பசுமை ஆற்றல் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித் திருக்கிறது. அதற்கு, பசுமை ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான ஆய்வு, ஓர் ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றும் செயல்முறை, ஆற்றலை சேமிப்பதன் முக்கியத்துவம் என நம்நாடு இந்த மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இலக்கை அடைய, இந்த ஆய்வுகளுக்கான முக்கியத்துவம் இனிவரும் காலங்களில் அதிகரிக்கப்படும். இந்தியாவை உலக அரங்கில் முன்னோடி நாடாகவும், மற்ற நாடுகளுக்கு வழி காட்டுகின்ற நாடாகவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் நிலைநிறுத்த வேண்டும் என்பதுதான் எனது இலக்கு” என்கிறார் தன்னம்பிக்கை மிளிர.

`80 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற அறிவிப்பு வந்த தருணம் எப்படி இருந்தது?’ - இறுதியாகக் கேட்டோம்.

``அளவில்லாத மகிழ்ச்சியுடன், கூடவே கடமை யும், பொறுப்பும் அளவில்லாமல் அதிகரித்திருப் பதை சேர்த்தே உணர்ந்தேன். இப்போது இந்தத் துறையில் நானொரு முன்னோடி பெண். இன்னும் பலர் இந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பதற்கான முன்னுதாரணமாக நான் இருக்க வேண்டும்’’ என்கிறார் கலைச்செல்வி கம்பீரமாக.

அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவை முன்நகர்த்த இருக்கும் தமிழ்ப்பெண்ணுக்கு வாழ்த்துகள்!