Published:Updated:

அரசியலில் இன்னொரு சிரஞ்சீவியாக விரும்பவில்லை ரஜினி!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

ரஜினியின் அரசியல் என்ட்ரியை தள்ளிப்போட்டதா அ.தி.மு.க வெற்றி?

அரசியலில் இன்னொரு சிரஞ்சீவியாக விரும்பவில்லை ரஜினி!

ரஜினியின் அரசியல் என்ட்ரியை தள்ளிப்போட்டதா அ.தி.மு.க வெற்றி?

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க பெற்ற வெற்றி, தி.மு.க-வுக்குள் அதிர்ச்சி ரேகைகளைப் படரவிட்டது ஒருபுறம் இருக்க, அது ரஜினியின் அரசியல் ‘என்ட்ரி’ யையும் பாதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கட்சி தொடங்கிய சிரஞ்சீவி, அங்கு அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒருகட்டத்தில் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். சமீபத்தில் அவர் விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “ரஜினி, அரசியலுக்கு வர வேண்டாம்” என்று ரஜினிக்கு அட்வைஸ் செய்திருந்தார். ``இதையெல்லாம் வைத்து கணக்குப்போடும் ரஜினியின் தரப்பு, கட்சி தொடங்கும் முடிவைத் தள்ளிப்போட்டிருக் கிறது’’ என்கிறார்கள், ரஜினியின் அரசியலை உற்று கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள்.

சிரஞ்சீவி
சிரஞ்சீவி

ரஜினியின் பல்ஸ் அறிந்தவர்களிடம் பேசினோம். “இடைத்தேர்தல் முடிவுகள், ரஜினிக்குள் இப்படியான தயக்கத்தை ஏற்படுத்தி யிருப்பது உண்மைதான். ‘234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன்’ என்று டிசம்பர் 31, 2017-ல் ரஜினி அறிவித்ததைப்போல் அவரால் தேர்தலை தனியாக எதிர்கொள்ள முடியாது என்றே தெரிகிறது. வெற்றி பெறுவதற்கு, பலமான கூட்டணி தேவை. இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கூட்டணிக் கட்சித் தலைவர்களின் உழைப்பால்தான், இந்த வெற்றி சாத்திய மானது’ எனப் பெருந்தன்மையுடன் கூறினார். மருத்துவர் ராமதாஸ் தொடங்கி நடிகர் கார்த்திக் வரை நன்றி தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளை தக்கவைக்கும் வியூகம்தான் இது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகளால் பா.ம.க, தே.மு.தி.க., த.மா.கா ஆகிய கட்சிகள் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் தொடரவே விரும்பும். இதுதான் ரஜினியை யோசிக்கவைத்துள்ளது. தன்னுடைய அரசியல் என்ட்ரிக்கு பலம் என ரஜினி நினைப்பது, வன்னியர் மற்றும் பட்டியல் சமூக வாக்குகளைத்தான். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்த இரு சமூக வாக்குகளும் அ.தி.மு.க-வுக்கு பெருவாரியாகச் சென்றுவிட்டன. இதுவும் ரஜினியை யோசிக்கவைத்திருக்கிறது” என்றவர்களிடம், “இடைத்தேர்தல் முடிவால் மட்டுமே ரஜினி இந்தளவுக்கு யோசிப்பாரா?” என்று கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“2009-ம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் ராஜசேகர ரெட்டியும், தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடுவும் உச்சத்தில் இருந்தபோதுதான் `பிரஜா ராஜ்ஜியம்’ கட்சியைத் தொடங்கினார் சிரஞ்சீவி. அவரால் 16.3 சதவிகித வாக்குகளுக்குமேல் தாண்ட முடியவில்லை. முடிவில், கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். கொஞ்சகாலம் மத்திய அமைச்சராகவும் இருந்து பார்த்தார். அதுவும் போனியாகாததால் அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டார். இந்த நிலை, தனக்கு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ரஜினி.

ரஜினி
ரஜினி

வரும் மார்ச் மாதத்தில் புதிய கட்சியைத் தொடங்க ரஜினி திட்டமிட்டிருந்த நிலையில், அவரது அரசியல் வருகையை இந்த இடைத் தேர்தல் முடிவுகள் தாமதப்படுத்தி யுள்ளன. அ.தி.மு.க-வின் வெற்றிக்கு தாங்கள்தான் காரணம் என்று பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை கொண்டாடுவதிலிருந்தே, அ.தி.மு.க கூட்டணியுடன் அவர்கள் செல்ல விரும்புவது தெரிகிறது. அ.தி.மு.க-விடமிருந்து கூட்டணிக் கட்சிகளைப் பிரித்து, தன்னுடன் சேர்த்துக்கொள்ள ரஜினி காத்திருக்கிறார். அதற்கான சூழலை இடைத்தேர்தல் முடிவுகள் மாற்றிவிட்டன” என்றனர்.

2014-ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க., 2019-ம் ஆண்டு தேர்தலில் 105 தொகுதிகளையே பெற முடிந்தது. ஹரியானாவில் ஜாட் சமூக வாக்குகள் பா.ஜ.க-வுக்கு எதிராகத் திரண்டதால், காங்கிரஸ் 31 தொகுதிகளை வென்றுள்ளது. இந்த மாற்றங்களும் ரஜினியைக் குழப்பியுள்ளனவாம். `‘தேர்தலை தனியாகச் சந்தித்து மற்றொரு சிரஞ்சீவியாக மாற, ரஜினி விரும்பவில்லை’’ என்றே அவருக்கு நெருக்கமான நட்பு வட்டங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி, சிரஞ்சீவியா... என்.டி.ஆரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தோல்வியடைந்த கிஷோர் வியூகம்

காராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரை வைத்து தேர்தல் வியூகம் வகுத்த சிவசேனாவுக்கு, பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 124 தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சியால், சரிபாதிக்கும் குறைவாகவே வெற்றிபெற முடிந்துள்ளது. ‘கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்தது இதற்குத்தானா?’ என்று பிரசாந்த் கிஷோர்மீது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுப்பில் இருக்கிறார். அதேசமயம், தமிழரான ஜான் ஆரோக்கியசாமியின் டீமின் வியூகத்தால் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 எம்.எல்.ஏ-க்களைப் பெற்று மகாராஷ்டிரா அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism