Published:Updated:

கேரள அரசின் ‘லைஃப்’ வீடுகள் திட்டம் - மக்கள் நலனா, தேர்தல் அரசியலா?

பினராயி விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
News
பினராயி விஜயன்

‘வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குகிறோம்’ என்று கேரள அரசு விளம்பரப்படுத்திவருகிறது.

‘‘அவர்களிடம் சாதி கேட்கவில்லை, மதம் கேட்கவில்லை, குடியுரிமை கேட்கவில்லை. அவர்களை உடன்பிறப்புகளாகப் பார்த்தோம். `உங்களுக்கு தலை சாய்த்து உறங்க வீடு இருக்கிறதா?’ என்று கேட்டோம். `இல்லை’ என்றவர்களை அரவணைத்துக்கொண்டோம்’’ கேரளம் முழுவதும் ஒலிப்பது முதல்வர் பினராயி விஜயன் பேசும் இந்த வீடியோ விளம்பரம்தான். ‘எளியோரும் வசிக்க ஒரு வீடு’ என்ற கொள்கையுடன் ‘லைஃப்’ என்ற திட்டத்தின் மூலம் மாநிலத்தில் இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 262 வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது கேரள அரசு.

அந்த வீடுகள் எப்படி இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள, திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை பஞ்சாயத்து கொடவிளாகம் பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு விசிட் செய்தோம்.

ஒரு ஹால், இரண்டு பெட்ரூம், கிச்சன் என அமர்க்களமாகக் கட்டப்பட்டுள்ளது வீடு. அரசு நான்கு லட்சம் ரூபாய் மானியமாகக் கொடுத்திருந்தாலும் மேலும் சில லட்சங்கள் செலவுசெய்து நேர்த்தியாக வீட்டை அமைத்திருக்கிறார்கள். புதிய வீடு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் சங்கீதாவிடம் பேசினோம், ‘‘நான் முந்திரி தொழிற்சாலையில் வேலைசெய்து வருகிறேன். எனக்கு இரண்டு மகன்கள். இரண்டாவது பிரசவம் சமயத்தில் கணவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். மண்ணால் கட்டப்பட்ட ஷீட் கூரை வீட்டில் வசித்துவந்தேன்.

லைஃப் திட்டம்
லைஃப் திட்டம்

‘லைஃப்’ திட்டத்தின்கீழ் நான்கு லட்சம் ரூபாய் அரசு வழங்கியது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் 90 நாள்களுக்கான சம்பளமாகக் கிடைத்த 24,390 ரூபாயை வீட்டில் வைத்திருந்தேன். அத்துடன் கடன் வாங்கி மொத்தம் ஏழு லட்சம் ரூபாய் செலவில் இந்த வீட்டைக் கட்டி முடித்தோம். ஃபவுண்டேஷன் அமைப்பதில் தொடங்கி வீடு கட்டி முடிக்கும் வரையில் முழு வேலையையும் முடிக்க நான்கு கட்டங்களாக நிதி வழங்கினர்’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குகிறோம்’ என்று கேரள அரசு விளம்பரப்படுத்திவருகிறது. ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரசு நிதி வழங்கி முழுவதும் பணி முடிக்காமல் இருந்த வீடுகள், நிலம் இருப்பவர்கள், பழுதடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்குத்தான் இப்போது கேரள அரசு வீடு வழங்கியிருக்கிறது. நிலமும் வீடும் இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் குடிசை கட்டி வசிப்பவர்களுக்கு இன்னும் வீடு வழங்கப்படவில்லை.

சங்கீதா - ஜோதிஸ்குமார் - பி.ராஜிவ்
சங்கீதா - ஜோதிஸ்குமார் - பி.ராஜிவ்

இதை, திருவனந்தபுரத்தில் நடந்த பயனாளிகளுக்கு வீடுகள் அர்ப்பணிக்கும் விழாவில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயனும் கோடிட்டுக்காட்டினார். ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், `வசிக்க வீடு இல்லை’ என்றும், `இப்போது இருக்கும் வீடுகள் நாங்கள் வசிக்கும் நிலையில் இல்லை’ என்றும், `முந்தைய ஆட்சியில் அரசு வழங்கிய வீட்டுக்கான நிதி பற்றாமல்போனதால் பாதியிலேயே வீட்டுப் பணி நிற்கிறது’ என்றும் நிறைய மனுக்கள் வந்தன. அதற்கு தீர்வுகாண முடிவுசெய்தோம். இதற்கு முன்பும் வீடு கட்ட கேரள அரசு பல்வேறு துறைகள் மூலம் நிதி உதவி செய்தது. இதுபோக, மத்திய அரசும் வீடு கட்ட நிதி வழங்குகிறது. இந்த நிதிகளை எல்லாம் பயன்படுத்தி மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவுசெய்தோம். இதற்காக கணக்கு எடுத்தபோது, வீடு தேவை என்ற நிலையில் ஐந்து லட்சம் குடும்பங்கள் இருப்பது தெரியவந்தது. வீடு வழங்கும் அனைத்து துறைகளின் விதிமுறைகளையும் கருத்தில்கொண்டு, புதிய முறையைத் தொடங்கி னோம். அதற்கு ‘லைஃப்’ என்று பெயர் சூட்டினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘லைஃப்’ திட்டத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்தோம். முந்தைய ஆட்சியில் வீட்டு வேலை தொடங்கி பாதியில் நின்றுபோன பணிகளைப் பூர்த்திசெய்ய நிதி வழங்குவது முதற்கட்ட திட்டம். இரண்டாவது கட்டமாக நிலம் இருந்தும் வீடு கட்ட பணம் இல்லை என்ற நிலையில் இருந்தவர்களுக்கு நிதி வழங்கியுள்ளோம். மூன்றாம் கட்டமாக நிலமும் வீடும் இல்லை என்ற நிலையில் புறம்போக்கு நில ஷெட்டுகளில் வசிப்பவர்களுக்காக வீடுகள் வழங்க உள்ளோம்’’ என்றார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இந்தத் தொடக்கவிழா நிகழ்ச்சியை எதிர்க்கட்சி யான காங்கிரஸ் புறக்கணித்தது. ‘இது தேர்தலுக்கான ஸ்டன்ட்’ என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜோதிஸ்குமார் சியாமக்கால கூறுகையில், ‘‘கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் நான்கு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளோம். இந்த அரசு இரண்டு லட்சம் வீடுகள் கட்டிக்கொடுத்ததை பெரிய அளவில் விளம்பரப்படுத்திக்கொள்கிறது. அதிலும், கடந்த ஆட்சியில் வேலை தொடங்கி முடியாமல் இருந்த ஐம்பத்திரண்டாயிரம் வீடுகளையும் சேர்த்துதான் இந்தக் கணக்கு. இடமும் வீடும் இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. வீடு கட்ட உதவி செய்வது அரசின் பணிதான். தேர்தலைக் கருத்தில்கொண்டு அரசுப் பணத்தில் மார்க்சிஸ்ட் அரசு இவ்வளவு விளம்பரம் செய்வதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’’ என்றார்.

சி.பி.எம் கேரள மாநிலக் குழு உறுப்பினர் பி.ராஜிவ், ‘‘கேரளாவில் சி.பி.எம் அரசின் செயல்பாடுகளை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் நான்கு லட்சம் வீடுகள் கட்டியிருந்தால், வீடு இல்லாதவர்கள் என்ற நிலை இருந்திருக்காதே. அவர்கள் இப்போது அரசியலுக்காக அதைக் கூறுகின்றனர். காங்கிரஸ் காலத்தில் தொடங்கிய வீடுகள் வேலை முடியாததையும் நாங்கள் முடித்துக் கொடுத்திருக் கிறோம். அதற்கான கிரெடிட் யாருக்கு என்ற விவாதத்துக்கு நாங்கள் செல்லவில்லை. மக்களுக்காகப் பணி செய்கிறோம். அரசியல்ரீதியாக நாங்கள் இதை அணுகவில்லை’’ என்றார்.