Published:Updated:

`அக்னிபத்' போராட்டம்: ``ரயில்வே சொத்துகளைச் சேதப்படுத்த வேண்டாம்" - மத்திய அமைச்சர் வேண்டுகோள்

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

``ரயில்வே நமது தேசிய சொத்து, அதற்கு எந்த பாதிப்போ அல்லது சேதமோ ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நம்முடைய பொறுப்பு." - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

`அக்னிபத்' போராட்டம்: ``ரயில்வே சொத்துகளைச் சேதப்படுத்த வேண்டாம்" - மத்திய அமைச்சர் வேண்டுகோள்

``ரயில்வே நமது தேசிய சொத்து, அதற்கு எந்த பாதிப்போ அல்லது சேதமோ ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நம்முடைய பொறுப்பு." - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Published:Updated:
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்திய ராணுவத்தில் புதிய முறையில் ஆள் சேர்க்கும்விதமாக, `அக்னிபத்' எனும் திட்டத்தைக் கடந்த செவ்வாயன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தியிருந்தார். இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியிருந்தது. மேலும், இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள், நான்கு வருடங்கள் இதில் பணியாற்றுவார்கள் என்றும், இந்த நான்கு வருட சேவைக்குப் பிறகு அவர்களிலிருந்து 25 சதவிகிதம் பேர் மட்டுமே இந்திய ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு, அரசு தரப்பிலிருந்தும், பாஜக ஆளும் மாநில அரசுகள் தரப்புகளிலிருந்தும் ஆதரவு வந்த போதிலும், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் வந்தவண்ணம் உள்ளன.

செகந்தராபாத் ரயில் நிலையத்தில் ரயிலுக்கு தீ வைப்பு
செகந்தராபாத் ரயில் நிலையத்தில் ரயிலுக்கு தீ வைப்பு
ட்விட்டர்

இதுவொருபுறமிருக்க, அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம், பெரும் கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில், பீகார், தெலங்கானா மாநில ரயில் நிலையங்களில், ரயில்களுக்குத் தீவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தெலங்கானா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே சொத்துகளைச் சேதப்படுத்த வேண்டாம் என்பதாகக் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், ``ரயில்வே நமது தேசிய சொத்து, அதற்கு எந்த பாதிப்போ, சேதமோ ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நம்முடைய பொறுப்பு. அதுமட்டுமல்லாமல் ரயில்வே, உங்களுடைய சேவைகளுக்காக மட்டுமே. எனவே வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம்’’ என்றும், ``ரயில்வே சொத்துகளைச் சேதப்படுத்த வேண்டாம்’’ என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism