Published:Updated:

ஜூ.வி செய்தி எதிரொலி: விக்கிரவாண்டி பயணவழி ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை!

உணவு பாதுகாப்புத்துறை சோதனை
News
உணவு பாதுகாப்புத்துறை சோதனை

பொதுமக்கள், தங்களுடைய புகார்களைத் தெரிவிக்கும் வகையில் ஆறு ஹோட்டல்களிலும் வாட்ஸ்அப் புகார் எண்ணை ஒட்டியுள்ள உணவு பாதுகாப்புத்துறை, அந்த ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்துள்ளது.

12.12.2021 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், "தரமற்ற உணவு... மூன்று மடங்கு விலை... அடாவடி ஹோட்டல்களுக்குத் துணைபோகும் அரசுப் போக்குவரத்துக் கழகம்" எனும் தலைப்பில் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னையிலிருந்து பல ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள், குறிப்பிட்ட ஹோட்டலில்தான் நிற்க வேண்டும் என ஒப்பந்தங்கள் போடப்பட்டு, பயணவழி உணவகங்களில் கட்டாயமாக நிறுத்தப்படுவதையும், தரமற்ற உணவு, மூன்று மடங்கு அதிக விலை, அடாவடிப் பேச்சு என தொலைதூரப் பயணிகள் சந்திக்கும் துயரங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தோம்.

உணவு பாதுகாப்புத்துறை சோதனை
உணவு பாதுகாப்புத்துறை சோதனை

இந்த நிலையில், நேற்று (17.12.2021) இரவு விக்கிரவாண்டி அருகே உள்ள பேருந்துகள் நிறுத்தப்படும் பயணவழி உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறையின் விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் மூலம் அதிரடி சோதனை நடைபெற்றுள்ளது. ஹோட்டல் ஹில்டா, ஹோட்டல் அரிஸ்டோ, ஹோட்டல் அண்ணா, ஹோட்டல் உதயா, ஹோட்டல் ஜே.ஜே.கிளாசிக், ஹோட்டல் ஜே.கிளாசிக் ஆகிய ஆறு சாலையோர பயணவழி உணவகங்களில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. ஆய்வின்போது, செயற்கை நிறமூட்டிய கார வகைகள் சுமார் எட்டு கிலோ, பாக்கெட்டில் அடைக்கப்பட்டு உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத சுமார் 20 கிலோ உணவுப்பொருள்கள், நாள்கள் கடந்த இட்லி மாவு, பரோட்டா போன்றவை சுமார் 40 கிலோ, அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் 12 கிலோ போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சாலையோர பயணவழி உணவகங்களில் உணவு அருந்தும் பொதுமக்கள், தங்களுடைய புகார்களை உணவு பாதுகாப்புத்துறைக்குத் தெரிவிக்கும் வகையில் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணை மேற்கண்ட ஆறு ஹோட்டல்களிலும் ஒட்டியிருக்கும் உணவு பாதுகாப்புத்துறை, சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் அளித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.