Election bannerElection banner
Published:Updated:

மும்முனைப் போட்டி; பரபரக்கும் தேர்தல் களம் - மக்கள் யார் பக்கம்? மேற்கு வங்க ரிப்போர்ட்!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் - காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி என மும்முனைப் போட்டி, தேர்தல் களத்தை அனல் பறக்கவைக்கிறது.

மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வரை எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி தீவிரமாக இருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக மம்தா பானர்ஜி இருக்கும் நிலையில், பா.ஜ.க தரப்பிலிருந்து இதுவரை யார் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மூன்று இடங்களை மட்டுமே பிடித்த பா.ஜ.க., 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அதைத் தொடர்ந்து 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக செயல்பட்ட பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸின் முக்கியத் தலைவர்களையெல்லாம் தன் பக்கம் இழுக்கத் தொடங்கியது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒற்றைமுகமாக இருக்கும் மம்தாவை வீழ்த்த, 1,500 கூட்டங்கள்,15,000 வாட்ஸ்அப் குழுக்கள், முக்கியத் தலைவர்களைக் களமிறக்கவும் பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. `அனைத்து வகையிலும் நாட்டிலிலேயே பின்தங்கிய மாநிலமாக மேற்கு வங்கம் இருக்கிறது.’ என்று தீவிரமாகப் பரப்புரை செய்துவருகிறது.

இது மட்டுமல்லாமல் பா.ஜ.க-வின் முக்கிய முகங்களான பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவைத் தவிர்த்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பல அமைச்சர்களைப் பரப்புரையில் பா.ஜ.க களமிறக்கவிருக்கிறது.

இதில் குறிப்பாக அதிக சவாலுள்ள 100 தொகுதிகளில் பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் 22 பேரைக் களமிறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள் தொடங்கி பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த பணிகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி பீகாரைப்போலவே மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்து விடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

போதைப்பொருளுடன் சிக்கிய பா.ஜ.க பிரபலம்; பரபரக்கும் மேற்கு வங்கம் - யார் இந்த பமீலா கோஸ்வாமி?

இந்தச் சூழலில், வாக்குப்பதிவுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், `மேற்கு வங்கத்தின் மகள்' என்று பரப்புரை செய்யும் மம்தாவுக்கு எதிராகக் களமிறக்க பா.ஜ.க-வின் முதல்வர் முகம் யார் என்பதைக் கட்சித் தலைமை இதுவரை அறிவிக்காமலேயே இருக்கிறது. இதை ஈடுசெய்யும்விதமாக, இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கும் அரசியல் கூட்டங்கள், பேரணிக்கு பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது.

காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து மேற்கு வங்கத்தில் தேர்தலைச் சந்திக்கவிருக்கின்றன. பிப்ரவரி 28-ம் தேதி கொல்கத்தாவில் நடந்த கூட்டணிக் கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வின் புகைப்படங்கள் வைரலாகின. தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகும் பட்சத்தில், கடந்த காலங்களில் பா.ஜ.க கூட்டணியில் இருந்த மம்தா, கூட்டணி ஆட்சி அமைப்பார் என்கிறார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்கள். இதனால் இருவரையும் வீழ்த்த வேண்டும் என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முழங்கியிருக்கிறார்கள்.

காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் கூட்டணியில், இரு மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்தியன் செகுலர் பிராண்ட் இடம்பிடித்திருக்கிறது. இதில் இஸ்லாமியர்கள், 18 முதல் 27 வயதுடையவர்கள் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கம்யூனிஸ்ட்
கம்யூனிஸ்ட்

பிரதமர் மோடி மார்ச் 7-ம் தேதி கொல்கத்தாவில் பங்கேற்கும் கூட்டத்திற்கு 20 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று பா.ஜ.க-வினர் எதிர்பார்க்கிறார்கள். இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி மோடி முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைவார் என்று செய்திகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், மாநில பா.ஜ.க தலைமை அது குறித்து உறுதியான தகவல் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. ஜனவரி இறுதியில் மாரடைப்பு ஏற்பட்டு கங்குலி ஓய்வில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

35 ஆண்டுக்கால கம்யூனிஸ்ட்கள் ஆட்சியை வீழ்த்த களத்தில் இறங்கினார் மம்தா. இப்போது மம்தாவை வீழ்த்த, பா.ஜ.க பல திட்டங்களை வகுத்துவருகிறது. இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கும் நோக்கில் கம்யூனிஸ்ட் கூட்டணி செயல்படுகிறது. இந்த மும்முனைப் போட்டியில், மக்கள் யாரை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தபோகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

மும்முனைப் போட்டி; பரபரக்கும் தேர்தல் களம் - மக்கள் யார் பக்கம்? மேற்கு வங்க ரிப்போர்ட்!

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு