Election bannerElection banner
Published:Updated:

`சாலைப் பாதுகாப்புச் சட்டம் ஏன் தேவை?!’ - விளக்கும் தமிழ்ச்சாலைப் பண்பாட்டுக் கழகம்

தமிழ்ச்சாலைப் பண்பாட்டுக் கழகம்
தமிழ்ச்சாலைப் பண்பாட்டுக் கழகம் ( எம். விஜயகுமார் )

சாலை விபத்துகள் தேசியப் பேரிடராக உருவெடுத்துள்ளன. இதைப் பற்றியெல்லாம் சாலைப் பயணிகள் புகார் கொடுப்பதற்கு உரிய அலுவலகமோ, அதற்குரிய முகமையோ கிடையாது.

``ஜனநாயக நாட்டில் வாகனங்கள் வாங்க முடியாத ஏழைகள் சாலையில் நடந்து செல்லக்கூட வழியில்லாமல் தவிக்கிறார்கள். சட்டம் இல்லாததால் நியாயம் கேட்டு நீதிமன்றத்துக்குச் செல்ல முடியவில்லை. விபத்துகள் ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு கேட்டு நீதிமன்றத்துக்குச் செல்கிறோம். ஆண்டுதோறும் இந்தியாவில் சாலை விபத்துகளில் 1.5 லட்சம் பேரும், தமிழகத்தில் 16,000 பேரும் பலியாகிறார்கள்.

சாலை
சாலை

இந்தியாவில் வன விலங்குகள் வேட்டையாடுவதைத் தடுப்பதற்குச் சட்டம் இருக்கிறது. ஆனால், சாலையில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கென்று ஒரு சட்டம் கிடையாது. அதனால் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சாலைப் பயணிகள் விபத்துக்குள்ளாகி பலியாகிறார்கள். இதைத் தடுப்பதற்கு சாலைப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்'' என்று தமிழ்ச்சாலைப் பண்பாட்டுக் கழகம் சார்பாகக் குரல் கொடுத்துவருகிறார்கள்.

இது பற்றி தமிழ்ச்சாலைப் பண்பாட்டுக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பையா, ``இந்தியாவில் மோட்டார் வாகனச் சட்டம் மட்டுமே இருக்கிறது. சாலைப் பாதுகாப்புக்கென்று தனிச் சட்டம் இல்லை. அதனால் சாலையில் நடை பயணிகளுக்கென்று இடம் ஒதுக்கப்படுவதில்லை. சாலையின் ஓரத்தில் கடைகள் கட்டப்படுகின்றன. வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகிறது. கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்படுகின்றன.

ஜனநாயக நாட்டில் வாகனங்கள் வாங்க முடியாத ஏழைகள் சாலையில் நடந்து செல்ல வழியில்லாமல் தவிக்கிறார்கள். சட்டம் இல்லாததால் நியாயம் கேட்டு நீதிமன்றத்துக்குச் செல்ல முடியவில்லை. விபத்துகள் ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு கேட்டு நீதிமன்றத்துக்குச் செல்கிறோம். ஆண்டுதோறும் இந்தியாவில் சாலை விபத்துகளில் 1.5 லட்சம் பேரும், தமிழகத்தில் 16,000 பேரும் பலியாகிறார்கள். தமிழ்நாட்டில் நடைபயணிகள் மட்டும் 3,000 பேர் மரணிக்கிறார்கள். 1.5 லட்சம் பேருக்கு கை, கால்கள் முறிந்து படுகாயம் ஏற்படுகிறது.

தம்பையா
தம்பையா

சாலை விபத்துகள் தேசியப் பேரிடராக உருவெடுத்துள்ளன. இதைப் பற்றியெல்லாம் சாலைப் பயணிகள் புகார் கொடுப்பதற்கு உரிய அலுவலகமோ, அதற்குரிய முகமையோ கிடையாது. அதனால் சாலைப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருவதோடு, சாலைப் பாதுகாப்பு அமைச்சகத்தை ஏற்படுத்தி சாலைப் பாதுகாப்பு வீரர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்திலுள்ள அனைத்துப் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளிலுள்ள முக்கியச் சாலைகளில் நடை பயணிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல நடைபாதை அமைப்பார்கள். சாலை ஓரத்திலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நகர்மயமாதல் பரவலாக்கப்படும். விபத்துகள் தடுக்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்படும்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு