Published:Updated:

Fact Check: வீட்டு வாடகைக்கு GST வசூல் - என நிர்மலா சீதாராமன் சொன்னாரா? அல்லது வதந்தியா?|Video

நிர்மலா சீதாராமன்

Fact Check: மக்கள் தங்கள் ஆதங்கங்களையும், எதிர்ப்புகளையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர். இந்த செய்தி உண்மையா?

Fact Check: வீட்டு வாடகைக்கு GST வசூல் - என நிர்மலா சீதாராமன் சொன்னாரா? அல்லது வதந்தியா?|Video

Fact Check: மக்கள் தங்கள் ஆதங்கங்களையும், எதிர்ப்புகளையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர். இந்த செய்தி உண்மையா?

Published:Updated:
நிர்மலா சீதாராமன்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடு மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலாகி வந்தது. மக்கள் தங்கள் ஆதங்கங்களையும் , எதிர்ப்புகளையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர். ஆனால் இது வெறும் வதந்தி , இப்படி எந்த ஒரு அறிவிப்பையும் தான் வெளியிடவில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார். மேலும், ஊடகங்களில் பரவிய இந்த செய்தி ஒரு fakenews என்று பத்திரிகை தகவல் பணியகம் (PIB), தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர் .

Vikatan Fact Check
Vikatan Fact Check

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீடு மற்றும் கடைகளுக்குச் சாதாரணமாக எந்த வரியும் கிடையாது. ஆனால் வணிக கட்டடங்கள், வருடத்திற்கு ரூ.20 லட்சம் வாடகை கட்டும் பட்சத்தில், அவர்களுக்கு வரி வசூலிக்கப்படும். இந்த விதி 2017 -ம் ஆண்டு முதலே நடைமுறையில் உள்ளது.
தொடர்ந்து பெட்ரோல் , டீசல் ,சமையல் எரிவாயு என அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த வதந்தியை பல மக்கள் உண்மை என நினைத்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைத் தாண்டி , மாநில அரசு சொத்து வரியை அதிகரித்திருப்பதும் இந்த வதந்திக்கு மிக முக்கிய காரணம் .

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism