Published:Updated:

``ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைந்திருக்கின்றன" - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் ( ட்விட்டர் )

``காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலைமையைச் சீராக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது!" - மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய்

நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீரில் நடந்துவரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.

``ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து குறைந்திருக்கின்றன. 2018-ம் ஆண்டு 417 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன. இந்தத் தாக்குதல்கள் 2019-ல் 255, 2020-ல் 244, 2021-ல் 229 எனக் குறைந்திருக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர்

2018-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் 91 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இது 2019-ல் 80, 2020-ல் 62, 2021-ல் 42 எனக் குறைந்திருக்கிறது. 2018-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் பொதுமக்கள் 39 பேர் கொல்லப்பட்டனர். இது 2019-ல் 39, 2020-ல் 37, 2021-ல் 41 எனக் குறைந்திருக்கிறது. இதற்கிடையில், நக்சல் வன்முறைச் சம்பவங்கள் 2009-ல் 2,258-ஆகப் பதிவாகியிருந்த நிலையில், அது தற்போது 77 சதவிகிதம் குறைந்து 2021-ல் 509-ஆகப் பதிவாகியிருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலைமையைச் சீராக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது" என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தன் பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!