Published:Updated:

`உரிமைத் தொகை ரூ.1,000 எல்லோருக்கும் கிடைக்காதா?' காயத்ரி ரகுராம் ட்வீட்; உண்மை என்ன?

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டபோது அவர் குறிப்பிட்ட `அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும்’ என்ற வார்த்தையை ஆராய்ந்து எல்லோரும் ஆளுக்கொரு கருத்தை முன்வைத்தனர்.

தேர்தலுக்கு முன்பு பெண்களின் வாக்குகளை ஈர்க்கும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தன. மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்றார் கமல். இதையடுத்து, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்றார் மு.க.ஸ்டாலின். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1,500 வழங்கப்படும் என்றார் எடப்பாடி பழனிசாமி. இப்படிப் போட்டி போட்டுக்கொண்டு எல்லோரும் அறிவிப்புகளை வெளியிட்டாலும், இன்னொரு பக்கம் இது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

குடும்ப அட்டை
குடும்ப அட்டை
முதலமைச்சரிடம் புகார் அளிப்பதற்கான CM Cell; உங்கள் புகாரை பதிவு செய்வது எப்படி?

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டபோது அவர் குறிப்பிட்ட `அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும்’ என்ற வார்த்தையை ஆராய்ந்து எல்லோரும் ஆளுக்கொரு கருத்தை முன்வைத்தனர்.

குடும்பத்தலைவர் என்கிற இடத்தில் ஆண் பெயர் இருந்தால், அந்தக் குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படாது என்றனர் சிலர். இன்னும் சிலரோ அதெல்லாம் இல்லை எல்லோருக்கும் வழங்கப்படும் என்று அடித்துச் சொன்னார்கள். இப்படி `உரிமைத் தொகை’ அறிவிப்பை முன்வைத்து ஏராளமான சந்தேகங்கள் முளைத்தன. ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வமாக இன்றுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில்தான் பா.ஜ.க-வைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது இதுகுறித்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. அவர் ட்விட்டர் பக்கத்தில், ``ரேஷன் கடையில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறியிருந்தார்கள். அதுபற்றி விசாரிக்கச் சென்றால் கொண்டைக்கடலை கொடுத்த கார்டுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய். கொண்டைக்கடலை போடாத கார்டுகளுக்கு இல்லை என்று கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நான்கு எழுத்துகள் (NPHH) கொண்ட கார்டு தாரர்களுக்கு இல்லை என்றும் மூன்று எழுத்துகொண்ட (PHH) கார்டுகளுக்கு மட்டுமே உள்ளது என்றும் கூறுகிறார்கள். கொடுத்தால் அனைத்துப் பெண்களுக்கும் சமமாகக் கொடுங்கள் இல்லையென்றால் கொடுக்காதீர்கள்” - இப்படிக்கு ஒரு பெண்

முதல்வர், இதற்கு நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து இதுதொடர்பான விவாதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது.

அதாவது, காயத்ரி ரகுராமின் பதிவு, PRIORITY Household (PHH) என்ற குறியீடுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் (NPHH) Non-Priority Household என்ற குறியீடு உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படாது என்றும் சொல்கிறது. PRIORITY Household (PHH) என்பதற்கும் முன்னுரிமை உள்ள குடும்ப அட்டை என்றும் (NPHH) Non-Priority Household என்பதற்கு முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டை என்றும் பொருள்.

அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி

இந்தத் தகவல் உண்மையா, யாருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு அமைச்சர் அர.சக்கரபாணியிடம் கேட்டோம்.

``அதுகுறித்த விவரங்கள் எனக்குத் தெரியாது. அதுகுறித்து முதலமைச்சர்தான் அறிவிப்பார். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் உரையிலேயே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் முதலமைச்சர் அதுகுறித்து அறிவிப்பார். அதுவரை பொறுத்திருங்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு