Published:Updated:

பெரம்பலூர்: தொடர்ந்து 4-வது முறையாக உடைக்கப்பட்ட சாமி சிலைகள் - குவிக்கப்பட்ட போலீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெரம்பலூரில் சாமி சிலைகள் உடைப்பு
பெரம்பலூரில் சாமி சிலைகள் உடைப்பு

ஏற்கெனவே சிலை உடைப்பு விவகாரத்தில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்த நாதன், மீண்டும் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பாரா என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் அவரைத் தேடிவருகின்றனர்.

நான்காவது முறையாகப் பெரம்பலூரில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டக்களமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். என்ன நடக்கிறது பெரம்பலூரில்..?

சாமி சிலைகள் உடைப்பு
சாமி சிலைகள் உடைப்பு

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் பிரசித்திபெற்ற மதுர காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலின் துணைக் கோயில்களான பெரியசாமி, செங்கமலையார் கோயில்கள் மலையில் அமைந்திருக்கின்றன. இங்கு சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட சாமி பரிவார தெய்வங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த மாதம் 5-ம் தேதி பெரியசாமி கோயிலில் ஐந்துக்கும் மேற்பட்ட சுடுமண் சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன.

அதைக் கண்ட அந்தப் பகுதி மக்களும், பக்தர்களும் ஆவேசமடைந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மீண்டும் 8-ம் தேதி செங்கமலையார் கோயிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட 16 அடி உயரமுள்ள செங்கமலையார் சாமி சிலை, 5 அடி உயரமுள்ள சித்தர்கள் சிலை, 5 அடி உயரமுள்ள கொரப்புலியான் சிலை, குதிரை, காளை, வேட்டை நாய் உட்பட 10-க்கும் மேற்பட்ட சுடுமண்ணால் ஆன சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன.

உடைக்கப்பட்ட சுடுமண் சிலைகள்
உடைக்கப்பட்ட சுடுமண் சிலைகள்

அதைத் தொடர்ந்து, 3-வது முறையாக மீண்டும் 27-ம் தேதி சிறுவாச்சூர் கோயிலில் சாமி சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன. இந்த நிலையில், இந்து முன்னணியினர், பா.ஜ.க-வினர் சாலைமறியல், தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்பு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளைப் பிடிப்பதாக உத்தரவாதம் அளித்தனர்.

 `தனி நபரால் செய்திருக்க முடியாது' - சாமி சிலை உடைப்பு விவகாரத்தில் கொதிக்கும் பாஜக!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து மூன்று முறை சாமி சிலைகள் உடைக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் (8-ம் தேதி) நள்ளிரவு 12 அடி உயரம்கொண்ட குதிரை சிலை, ஆத்தாடி சித்தர் கோயிலில் மூன்றடி உயரமுள்ள நாககன்னி சிலை, பெருமாள் கோயிலில் ஐந்து அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை உட்பட மொத்தம் ஒன்பது சிலைகளை மர்ம நபர்கள் உடைத்துச் சேதப்படுத்தியிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

பெரம்பலூர் போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஏற்கெனவே, சிலை உடைப்பு விவகாரத்தில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்த நாதன் மீண்டும் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பாரா என்ற சந்தேகத்தின் பேரில் அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

`பெசன்ட் நகர் கடற்கரையில் ஒதுங்கிய சாமி சிலைகள்' - கடத்தப்பட்ட சிலைகளா என போலீஸ் விசாரணை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு