Published:Updated:

`141 பேரில் 34 பெண்கள்' - அருண் ஜெட்லி, சுஷ்மா, டிவிஎஸ் வேணு சீனிவாசனுக்கு பத்ம விருதுகள்!

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ்
அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ்

தமிழகத்தை சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் மாற்றுத்திறனாளி சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும், 7 பேருக்கு பத்ம விபூஷண் மற்றும் 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் மாற்றுத்திறனாளி சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு கலைப்பிரிவில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருதுகள்
பத்ம விருதுகள்

கலைப்பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கலீ ஷபி மஹபூப், ஷேக் மஹபூப் சுபானிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய பிரதீப் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷெரீஃப், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஜகதீஷ் லால் அவுஜாவுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்
ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

பத்ம விபூஷன் விருதுகள் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் உட்பட 7 பேருக்கு வழங்கப்படுகிறது.

வேணு சீனிவாசன்
வேணு சீனிவாசன்

தமிழகத்தை சேர்ந்த இருவருக்கும பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்படுகிறது. பத்ம பூஷன் விருது, தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கும் வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் டி.வி.எஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவில் பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு துறைக்கான பத்ம பூஷன் விருது பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வழங்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் பத்மபூஷன் விருது புதுச்சேரியைச் சேர்ந்த மனோஜ் தாஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு