Published:Updated:

கழிப்பறையை பயன்படுத்தியதற்கு 12% GST - 2 பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளிடம் ரூ.224 வசூலித்த ரயில்வே!

ரயில்வே

கழிப்பறையை பயன்படுத்திய பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் இருவரிடமும், 12 சதவிகித ஜி.எஸ்.டி வரியுடன் தலா 112 ரூபாயை ரயில்வே அதிகாரிகள் வசூலித்திருக்கின்றனர்.

கழிப்பறையை பயன்படுத்தியதற்கு 12% GST - 2 பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளிடம் ரூ.224 வசூலித்த ரயில்வே!

கழிப்பறையை பயன்படுத்திய பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் இருவரிடமும், 12 சதவிகித ஜி.எஸ்.டி வரியுடன் தலா 112 ரூபாயை ரயில்வே அதிகாரிகள் வசூலித்திருக்கின்றனர்.

Published:Updated:
ரயில்வே

டெல்லியிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்திலிருந்து திரும்பிய இரண்டு சுற்றுலாப் பயணிகள், ஆக்ரா கான்ட் ரயில் நிலையத்தில் இந்தியன் ரயில்வேயின் எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச் (Executive Lounge) கழிப்பறையைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

கழிப்பறை
கழிப்பறை

அதற்காக, அந்த பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் இருவரிடமும், 12 சதவிகித ஜி.எஸ்.டி வரியுடன் தலா 112 ரூபாயை ரயில்வே அதிகாரிகள் வசூலித்திருக்கின்றனர். இந்த செய்தி ஊடகங்கள் மூலம் வெளியவரவே, இது குறித்து ரயில்வே அதிகாரியொருவர், ``சிறுநீர் கழிக்க 112 ரூபாய் செலுத்துவது சற்று அதிகமாகத் தோன்றினாலும், ஓய்வறையின் சேவைகளைப் பயன்படுத்துவதற்கும் சேர்த்துதான் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

IRCTC
IRCTC

மேலும் இது குறித்து லவுஞ்ச் மேனேஜர் வெளியிட்ட அறிக்கையில், ``50 சதவிகித தள்ளுபடிக்குப் பிறகு குறைந்தபட்ச கட்டணம் 112 ரூபாய் என்பது கட்டாயமான ஒன்று. மேலும் இது ஒரு கப் காஃபி, இலவச வைஃபை மற்றும் லவுஞ்ச் அறையில் 2 மணிநேரம் நேரம்வரை இருத்தல் போன்றவற்றையும் உள்ளடக்கியது" என்று கூறப்பட்டிருக்கிறது.

இதேபோல்தான் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு, ரயில் பயணத்தின்போது 20 ரூபாயான ஒரு கப் டீ குடித்த பயணிக்கு, ரயில்வே அதிகாரிகள் 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜுடன் மொத்தம் 70 ரூபாய் பில் போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.