Published:Updated:

போராட்டம் நடத்திய ஆசிரியர்கள்... தேசியக்கொடி ஏந்தியவர் என்றும் பாராமல் தாக்கிய கூடுதல் ஆட்சியர்!

போராட்டக்காரரைத் தாக்கும் கூடுதல் ஆட்சியர்

வீடியோவில் வரும் காட்சியின்படி, தேசியக்கொடி ஏந்திய நபரைத் தாக்கியது, பாட்னா மாவட்ட கூடுதல் ஆட்சியர் கே.கே.சிங் என்று தெரியவந்திருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு பாஜக கூட்டணி ஆளுங்கட்சியாக இருந்த பீகாரில், தற்போது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சியாக இருந்த மகாபந்தன் கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் நிலையில், ஆள்சேர்ப்பு தாமதத்தைக் கண்டித்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் நேற்றுப் போராட்டம் நடத்தினர். பீகார் மாநிலம், பாட்னாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டத்தில், ஆசிரியர்கள்மீது போலீஸார் தடியடி நடத்திய சம்பவம் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது.

மேலும் இந்தச் சம்பவத்தில், தேசியக்கொடி ஏந்தியிருக்கும் நபர் ஒருவரை அதிகாரி ஒருவர் தடியால் கொடூரமாகத் தாக்கும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த வீடியோவில் வரும் காட்சியின்படி, தேசியக்கொடி ஏந்திய நபரைத் தாக்கியது, பாட்னா மாவட்ட கூடுதல் ஆட்சியர் கே.கே.சிங் என்று தெரியவந்திருக்கிறது.

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்
பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

இந்த நிலையில், இத்தகைய சம்பவம் பற்றித் தகவலறிந்த துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ``இந்த விவகாரத்தில் குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.