Published:Updated:

`24 போர் ஹெலிகாப்டர்கள்!'- அமெரிக்கா, இந்தியா இடையே ஒப்பந்தம்

Modi - Trump
Modi - Trump

இந்தியா 3 பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் ராணுவப் பொருள்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது குடும்பத்துடன் இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் வந்திருந்தது அனைவரும் அறிந்ததே. அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் உற்சாகக் குரல்களுக்கிடையே நமஸ்தே ட்ரம்ப் என்னும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது.

போர்விமானம்  இந்தியா
போர்விமானம் இந்தியா
`அனைவரும் எளிதில் படிக்க... நாட்டிலே முதல்முறை!'- பொது நூலகங்களை டிஜிட்டல் மயமாக்கும் கர்நாடகா

``உலகின் மிகச்சிறந்த மற்றும் அபாயம் தரக்கூடிய ராணுவ உபகரணங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ் (Super Hercules) மற்றும் சி-17 க்ளோப்மாஸ்டர்III டிரான்ஸ்போர்ட் ஏர்கிராஃப்ட். (Globemaster lll aircraft) பி-81 போஸிடான் லாங் ரேஞ் மேரிடைம் ஏர்கிராஃப்ட் (Poseidon long range maritime aircraft), எம்777 அல்ட்ராலைட் ஹோவிற்சர்ஸ் (Ultralight howitzers), சிஎச்-47எப் சினூக்(Chinook) மற்றும் ஏஎச்-64இ அப்பாச்சே ஹெலிகாப்டர்ஸ் (Apache helicopters), இவையெல்லாம் அதில் குறிப்பிடப்பட்ட ஆயுதங்களாகும்.

Trump - Modi
Trump - Modi
AP

இன்னும் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளன. இது அமெரிக்கா இந்தியாவின் பாதுகாப்பிற்குச் சிறந்த துணையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார் அவர்.

மோடி - ட்ரம்ப் சந்திப்பில் மூன்று வர்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், 3 பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் ராணுவப் பொருள்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் மட்டுமே கையொப்பமானது. இதன் மூலம் இந்தியாவுக்காக, அமெரிக்காவிடமிருந்து 24 சிகோர்ஸ்கய் என்எச்-60ஆர் நேவல் மல்டிரோல் போர் ஹெலிகாப்டர்கள் வாங்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு