Published:Updated:

12 மருந்துகளுக்கான ஏற்றுமதித்தடையை விலக்கியது இந்தியா!

ஏற்றுமதி
ஏற்றுமதி

தற்போது சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதனால், அங்கிருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, 12 மருந்துப்பொருள்கள் மீதான ஏற்றுமதித்தடையை இந்தியா விலக்கியுள்ளதாகத் தெரிகிறது.

கொரோனா சிகிச்சைக்கு உதவும் 12 மருந்துப் பொருள்களின் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. கடந்த மாதத்தில் கொரோனா தாக்குதல் சீனாவில் உச்சத்துக்கு வந்தபோது அங்கிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பல்வேறு மருந்து வேதிப்பொருள்களை, சீனா தடை செய்தது. இதன்காரணமாக இந்தியாவில் குறிப்பிட்ட சில மருந்துப்பொருள்களின் ஏற்றுமதிக்குக் கடந்த மாதத்தில் தடைவிதிக்கப்பட்டது.

மருந்துப்பொருள்
மருந்துப்பொருள்

நேற்று (ஏப்ரல் 6), டினிடசோல், மெட்ரோனிடசோல், வைட்டமின் பி1, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, குளோரோபெனிகால், எரித்ரோமைசின், கிளின்டாமைசின் உள்ளிட்ட 12 மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு விலக்கியுள்ளது. இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள தகவலில், கடந்த மாதம் விதிக்கப்பட்ட ஏற்றுமதிக்கான தடையை விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்கிருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே 12 மருந்துப்பொருள்களின்மீதான ஏற்றுமதித்தடையை இந்தியா விலக்கியுள்ளதாகத் தெரிகிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்கான மருத்துவத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இந்த மருந்துகள் தேவைப்படுகின்றன. அதன்காரணமாகவும் இந்தப் பொருள்களுக்கான ஏற்றுமதி மீண்டும் தொடங்கியிருக்கக்கூடும்.

மருந்து
மருந்து
Representational

இந்தியாவில் பெருமளவு தயாரிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்தார். தனது கோரிக்கையை ஏற்காவிட்டால் தக்க பதிலடி தரப்படும் என்றும் மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும், ஏற்கெனவே ஆர்டர் கொடுத்துள்ள நாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்வது குறித்து இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் தேவைக்குப்போக மீதமுள்ள ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிகிறது

அடுத்த கட்டுரைக்கு