Published:Updated:

குடியுரிமைத் திருத்தச்சட்டம் - என்.ஆர்.சி தெரிந்து கொள்ளவேண்டியவை என்ன? #VikatanInfographics

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டமும் அடுத்து இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கிற என்.ஆர்.சிக்கும் உள்ள தொடர்பை விளக்குவதே இந்தக் கட்டுரை.

என்.ஆர்.சி
என்.ஆர்.சி

மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதிலிருந்தே இந்தியா முழுவதும் அதற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. வடகிழக்கில் தொடங்கிய போராட்டங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கின. ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காவல்துறையின் செயல்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது.

திரைத் துறை, கலைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர். தேசிய குடிமக்கள் பதிவேடு என்றால் என்ன? அஸ்ஸாமில் இது எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும் இதற்கும் உள்ள தொடர்பு பற்றியதே இந்தத் தொகுப்பு.

என்.ஆர்.சி
என்.ஆர்.சி
`சார்...நாங்கள் தெரியாமல் செய்த தவறு அது!' -ரவி ஐ.பி.எஸ்-ஸிடம் கலங்கிய 2 மாணவிகள்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2015-ம் ஆண்டு தொடங்கிய என்.ஆர்.சி பணி பெரும் குழப்பங்களை விளைவித்துள்ளது. தகுதிவாய்ந்த பலரும் இறுதி என்.ஆர்.சி பட்டியலில் சேர்க்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஃபக்ருதின் அலி அகமதின் உறவினர்கள், முன்னாள் கார்கில் ராணுவ வீரர் எனப் பலரின் பெயர்களும் விடுபட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆறு ஆண்டுகள், 20,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் உழைப்பில் ரூ.1,200 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்ட என்.ஆர்.சியை தற்போது நிராகரிக்க வேண்டும் என அஸ்ஸாம் மாநில அரசும், பா.ஜ.க-வும் கோரிவருகிறது.

என்.ஆர்.சி
என்.ஆர்.சி

அஸ்ஸாம் என்.ஆர்.சியிலே இத்தகைய குளறுபடிகள் ஓயாத நிலையில், இந்தியா முழுவதும் என்.ஆர்.சி கொண்டு வரப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து கூறிவருகிறார். அதோடு புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டமும் இணைந்தால் குடியுரிமை இழப்பவர்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் குடியுரிமை பெற இயலும். முஸ்லிம்கள் இதனால் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என கடும் எதிர்ப்புகள் இருந்துவருகின்றன.

என்.ஆர்.சி
என்.ஆர்.சி