Published:Updated:

`பள்ளி மதிய உணவில் காலாவதியான முட்டையா?’ - மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; ஆட்சியர் விசாரணை!

ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்

தங்கள் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்ததும், பெற்றோர்கள், ஊர்க்காரர்கள் பெரும் எண்ணிக்கையில் மருத்துவமனையில் கூடியதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

`பள்ளி மதிய உணவில் காலாவதியான முட்டையா?’ - மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; ஆட்சியர் விசாரணை!

தங்கள் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்ததும், பெற்றோர்கள், ஊர்க்காரர்கள் பெரும் எண்ணிக்கையில் மருத்துவமனையில் கூடியதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

Published:Updated:
ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த பதற்றமும் கவலையும் அடைந்தனர். இதற்கான காரணம் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகேயுள்ள கண்டியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்துவருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், இப்பள்ளியிலேயே மதிய உணவு சாப்பிடுவது வழக்கம்.

மாணவர்கள்
மாணவர்கள்

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் சென்றுள்ளனர். அடுத்த சிறிது நேரத்திலேயே சில மாணவர்கள் மயங்கி விழ ஆரம்பித்துள்ளனர். சிலர் வாந்தி எடுத்துள்ளனர். மதிய உணவு சாப்பிட்ட 37 மாணவ-மாணவிகளில் ஏழு பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மதிய உணவு சாப்பிட்ட 39 மாணவர்களையும் தலைமையாசிரியர் சுமதி, ஆசிரியைகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி ஆரம்ப சுகாதார மையத்திலும், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். தங்கள் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்ததும், பெற்றோர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் பெரும் எண்ணிக்கையில் மருத்துவமனையில் கூடியதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து தகவலறிந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், வட்டாட்சியர் சந்தான கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் அரசு மருத்துவனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவரும் மாணவ, மாணவிகளைச் சந்தித்து, உடல்நிலை குறித்து கேட்டறிந்து ஆறுதல்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக வலங்கைமான் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதஏகட்ட விசாரணையில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகளில் சில காலாவதியானவை என்பதும், அதை சாப்பிட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. இது போன்ற தவறு எப்படி, யாரால் நடந்தது என விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வலங்கைமான் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism