Published:Updated:

கொரோனா ஊழல்... அரசின் மறுப்பும் ஜூ.வி-யின் கேள்விகளும்!

கொரோனா ஊழல்
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா ஊழல்

நாம் வெளியிட்ட செய்தி எதுவும் இட்டுக் கட்டியதோ, பொய்யாகப் புனையப்பட்டதோ அல்ல. அரசாங்க ஆணையில் என்ன குறிப்பிடப் பட்டு இருக்கிறதோ, அதன் அடிப்படையில்தான் நாம் கேள்வி எழுப்புகிறோம்.

கொரோனா ஊழல்... அரசின் மறுப்பும் ஜூ.வி-யின் கேள்விகளும்!

நாம் வெளியிட்ட செய்தி எதுவும் இட்டுக் கட்டியதோ, பொய்யாகப் புனையப்பட்டதோ அல்ல. அரசாங்க ஆணையில் என்ன குறிப்பிடப் பட்டு இருக்கிறதோ, அதன் அடிப்படையில்தான் நாம் கேள்வி எழுப்புகிறோம்.

Published:Updated:
கொரோனா ஊழல்
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா ஊழல்

ஜூனியர் விகடன் 3.6.2020 தேதியிட்ட இதழில், ‘அட பாவிகளா! களப்பணி முதல் கவச உடை வரை... கொரோனா ஊழல்’ என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்து, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குநர் டாக்டர் பி.உமாநாத் ஐ.ஏ.எஸ் மறுப்புக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

‘‘வீனஸ் நிறுவனத்தின் என்.95 மாஸ்க் ஒன்றின் விலை ரூ.115 ஆக இருந்ததாகவும், அதை அரசு ரூ.70 அடக்கவிலையில் கொள்முதல் செய்திருக்க முடியும் என்றும், மாறாக ரூ.260 முதல் ரூ.350 வரை விலை வைத்து 8,000 எண்ணிக்கையிலான மாஸ்க்குகளை வாங்கி ஐந்து மடங்கு ஊழல் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.

வீனஸ் நிறுவனத்திடமிருந்து ஐந்து லட்சம் எண்ணிக்கையிலான என்.95 மாஸ்க்குகள் ரூ.40-க்கு மட்டுமே தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் வாயிலாக கொள்முதல் செய்யப்பட்டு, விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் அரசுக்கு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வீனஸ் நிறுவனத்துக்குக் குறைந்த உற்பத்தித்திறனே உள்ளதால், தமிழ்நாட்டுக்குத் தேவையான என்.95 மாஸ்க்குகளை USFDA தரச்சான்று பெற்ற நிறுவனங்களிட மிருந்து நேரடியாக இறக்குமதி செய்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் விலையும் ரூ.130 மட்டுமே. இரண்டு வகை என்.95 மாஸ்க்குகளின் கொள்முதல் ஆணை இணைக்கப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறாக இருக்கும்பட்சத்தில், ஐந்து மடங்கு ஊழல் நடந்துள்ளதாகச் செய்தி வெளியிட்டிருப்பது முற்றிலும் தவறானது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், ரூ.3-க்கு விற்கப்படும் மூன்று அடுக்கு சாதாரண மாஸ்க்குகள் ரூ.19 வரையில் அரசால் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இதில் ரூ.4.48 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருப்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. Ministry of Consumer Affairs and Public Distribution (Dept. of Consumer Affairs)–ஆல் சாதாரண மூன்று அடுக்கு மாஸ்க்கின் விலை ரூ.16 என்று நிர்ணயம் செய்திருந்தபோதும், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் இந்த வகை மாஸ்க்குகளை ரூ.9.80-க்கு முதலில் கொள்முதல் செய்தது. தற்போது தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் ரூ.4.75 என்ற அளவிலேயே கொள்முதல் செய்துவருகிறது. எக்காலத்திலும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தால் ரூ.19 என்ற விலையில் சாதாரண மாஸ்க்குகள் கொள்முதல் செய்யப்படவில்லை.

கொரோனா ஊழல்... அரசின் மறுப்பும் ஜூ.வி-யின் கேள்விகளும்!

இதேபோல, `பி.பி.இ கிட்’ (PPE Kit) எனப்படும் கவச உடையின் தோராய சந்தை விலை ரூ.290 என்றும், இது ரூ.1,500 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனவும் உண்மைக்கு மாறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் ஆரம்பிக்கும் முன்னர் இவ்வகையிலான பி.பி.இ கிட் ரூ.239-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கொரோனாவின் தாக்கம் உலகெங்கிலும் அதிகரித்தபோது, இவ்வகை பி.பி.இ கிட்கள் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்பட்டதால், இந்தியாவில் இதற்கான மூலப்பொருள்களுக்கு பெருமளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், கண்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் Safety Goggles இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டது. இத்தகைய சவாலான சூழ்நிலையில், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் திறம்படச் செயலாற்றி இந்த வகை பி.பி.இ கிட்களை ரூ.385-க்கு மட்டுமே விலை நிர்ணயம் செய்து, தங்குதடையின்றி கொள்முதல் செய்து வழங்கிவருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே ரூ.385 என்ற மிகக் குறைந்த விலையில் முழு பி.பி.இ கிட்-ஐ கொள்முதல் செய்து வழங்கிவருகிறது. இந்த வகை பி.பி.இ கிட்கள் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகத்தின் தரச்சான்று பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாநிலங்களில் பி.பி.இ கிட் விலை நிலவரத்தை விசாரித்து அறிந்துகொள்ளலாம்.

உமாநாத்
உமாநாத்

மேற்கூறிய உண்மை நிலவரம் மற்றும் ஆதாரத்தை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது தாங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் யாவும் முற்றிலும் உண்மைத்தன்மையற்று இருப்பதும், தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நேர்மையான கொள்முதலைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. எனவே, இந்தச் செய்திகளுக்கு தகுந்த மறுப்பு செய்தியையும், வருத்தத்தையும் எதிர்வரும் பதிப்பில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என்று அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாம் வெளியிட்ட செய்தி எதுவும் இட்டுக் கட்டியதோ, பொய்யாகப் புனையப்பட்டதோ அல்ல. அரசாங்க ஆணையில் என்ன குறிப்பிடப் பட்டு இருக்கிறதோ, அதன் அடிப்படையில்தான் நாம் கேள்வி எழுப்புகிறோம்.

1. நாம் வெளியிட்டுள்ள செய்தியில் எந்த இடத்திலும் பி.பி.இ கிட் கூடுதல் விலைகொடுத்து வாங்கப்பட்டதாக நாம் குற்றம்சாட்டவில்லை. கவச உடையின் தோராய சந்தை விலை ரூ.290 என்றும், இது ரூ.1,500 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் நாம் செய்தி வெளியிட்டிருப்பதாக திரு.உமாநாத் கூறியிருப்பது முற்றிலும் தவறானது.

மார்ச் 24-ம் தேதி சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணையில் (G.O. No. 391), ஒரு பி.பி.இ கிட்டின் விலையை 290-ஆக விலை நிர்ணயித்து, 110.40 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். ஏப்ரல் 27-ம் தேதி வருவாய்த்துறை வெளியிட்ட அரசாணையில் (G.O. No. 210), ஒரு பி.பி.இ கிட்டின் விலை 1,500 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அரசுத் துறைகளுக்குள் முன்னுக்குப் பின் முரணாக பி.பி.இ கிட்டின் விலை ஏன் மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என்பதுதான் நமது கேள்வி.

கொரோனா ஊழல்... அரசின் மறுப்பும் ஜூ.வி-யின் கேள்விகளும்!

தவிர, திருப்பூரில் இன்று ஒரு தரமான பி.பி.இ கிட் 280 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், `இதை அரசு ஏன் கொள்முதல் செய்யவில்லை...’ என்றும், `ஓப்பன் டெண்டர் விடப்பட்டால் பி.பி.இ கிட் இன்னும் விலை குறைவாகக் கிடைக்கும்’ எனவும் சில நேர்மையான ஒப்பந்ததாரர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்தத் தகவல் உண்மையா?

பி.பி.இ கிட்களைப் பொறுத்தவரை ஐந்து தரங்களில் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றின் விற்பனைக்குத் தரச்சான்றும் அவசியம். தமிழக அரசு கொள்முதல் செய்திருப்பது எந்த வகை மெட்டீரியலில் செய்யப்பட்டது, அதன் தரம் என்ன என்பதை வெளியிட வேண்டும். தரச்சான்றை மட்டுமே வைத்து, `நாங்கள் விலை குறைவாக வாங்கிவிட்டோம்’ எனச் சொல்வது ஏற்கத் தக்கதல்ல.

2. மூன்றடுக்கு மாஸ்க்குகளை 19 ரூபாய்க்கு எங்குமே வாங்கவில்லை, 9.80 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்துள்ளதாக நமக்கு அனுப்பிய பதிலில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கான ஆதாரமாக, மார்ச் 20-ம் தேதி மாஸ்க் கொள்முதல் செய்ய வெளியிட்ட உத்தரவையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் கூற்றுப்படியே எடுத்துக்கொள்வோம்.

மார்ச் 24-ம் தேதி சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணை (G.O. No.391)-ன்படி, ஒரு மூன்றடுக்கு மாஸ்க்கின் விலை 7 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய விலையை விடக் குறைவாக விலை நிர்ணயித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், ஏப்ரல் 27-ம் தேதி 70 ஆயிரம் மாஸ்குகளை வாங்குவதற்கு வருவாய்த்துறை வெளியிட்ட அரசாணையில் (G.O. No. 210) ஒரு மூன்றடுக்கு மாஸ்க்கின் விலை 16 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

9.80 ரூபாய்க்கு மூன்றடுக்கு மாஸ்க் வாங்கிய அரசு, 16 ரூபாய்க்கு ஏன் வாங்கியது?

தவிர, நம்மிடம் பேசிய நேர்மையான சுகாதாரத்துறை ஒப்பந்ததாரர்கள் 19 ரூபாய் விலையில் மூன்றடுக்கு மாஸ்க்குகளை சில நிறுவனங்கள் அரசுக்குக் கொள்ளை லாபத்தில் விற்றதாகக் குறிப்பிட்டனர். இதன் அடிப்படையில் தான் செய்தி எழுதப்பட்டது.

கொரோனா ஊழல்... அரசின் மறுப்பும் ஜூ.வி-யின் கேள்விகளும்!

3. கொரோனாவுக்கு முன்னர் வீனஸ் நிறுவனத்தின் என்.95 மாஸ்க்குகள் 115 ரூபாய்க்கு விற்கப்பட்டன. `அரசு நினைத்திருந்தால், வீனஸ் போன்ற மற்ற தனியார் நிறுவனங்களிடம் பேசி 70 ரூபாய்க்குக் கொள்முதல் செய்திருக்க முடியும்’ என்று நமது செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

திரு.உமாநாத் நமக்கு அனுப்பியுள்ள பதிலில், வீனஸ் நிறுவனத்தின் மாஸ்க்குகளை 40 ரூபாய்க்குக் கொள்முதல் செய்திருப்பதாகவும், அவர்களிடம் உற்பத்தித்திறன் குறைவு என்பதால் மற்ற நிறுவனங்களிடம் கொள்முதல் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் கொள்முதல் செய்துள்ள `BYD India Private Limited’ என்ற சீன நிறுவனம் மின்சாரப் பேருந்துகள், மின்சார டிரக்குகள், சோலார் பேனல்கள் தயாரிக்கும் நிறுவனம். தமிழகத்தில் மின்சார வாகன உற்பத்தியைத் தொடங்குவது தொடர்பாக, கடந்தாண்டு நவம்பர் 30-ம் தேதி முதல்வர் எடப்பாடி முன்னிலையில் இந்த நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. மின்சார வாகனத்தைத் தயாரிக்கும் நிறுவனம், எப்படி என்.95 மாஸ்க்குகளை அரசுக்கு சப்ளை செய்தது? இதற்கும் ஒரு விளக்கத்தை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் அனுமதியைப் பெற்றிருப்பதால், BYD India Private Limited-டமிருந்து ஐந்து லட்சம் என்.95 மாஸ்க்குகளை 6.82 கோடி ரூபாய்க்குப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதில்தான் சிக்கல்... கடந்த ஜனவரி மாதம் கொரோனா அச்சுறுத்தல் சீனாவைக் கபளீகரம் செய்தபோது, கே.என்.95 மாஸ்க்குகளை உற்பத்தி செய்வதற்கு பிப்ரவரி 7-ம் தேதி சீன அரசிடமிருந்து BYD நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக சீனாவின் ஷென்ஷென் நகரில் உலகிலேயே மிகப்பெரிய மாஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டு, உற்பத்தியை BYD நிறுவனம் தொடங்கியது.

ஏப்ரல் 3-ம் தேதி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடமிருந்து அனுமதி பெற்று, அன்றைய தினமே கே.என்.95 ரக மாஸ்க்குகளை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு அனுமதியும் பெற்றுள்ளது. ‘இந்த நிறுவனத்தின் மின்சாரப் பேருந்துகள் தரமில்லாதவையாக உள்ளன. வாஷிங்டனில் இந்த நிறுவனப் பேருந்துகள் ஓடுவதை நிறுத்த வேண்டும்’ என்று அமெரிக்க மேல்சபை உறுப்பினர் ஜான் காராமெந்தி மசோதா ஒன்றைக் கொண்டுவந்தார். இந்த மசோதாவைக் கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சட்டமாக்கியுள்ளார். ஆக, அமெரிக்க அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு, மாஸ்க்குகளை இறக்குமதி செய்ய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது என அந்த நாட்டில் சர்ச்சை வெடித்திருக்கிறது.

மேலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண ஆளுநர் கெவின் நியூசம், BYD நிறுவனத் திடமிருந்து 100 கோடி அமெரிக்க டாலருக்கு மாஸ்க்குகளை வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறார். இந்த ஒப்பந்தம் குறித்தும் அமெரிக்க மேல்சபையில் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். ‘BYD நிறுவனம் கே.என்.95 ரக மாஸ்க்குகளைத்தான் உற்பத்தி செய்கிறது. என்.95 ரக மாஸ்க்குகளை உற்பத்தி செய்யவில்லை. மாஸ்க்குகளை மாற்றி அனுப்பினால் யார் பொறுப்பேற்பது?’ என அமெரிக்காவில் பெரிய களேபரமே நடக்கிறது.

இவ்வளவு சிக்கலுடைய கம்பெனியிலிருந்துதான் தமிழக மருத்துவ சேவைகள் கழகம் என்.95 மாஸ்க்குகளைப் பெற்றிருக்கிறது. இவை உண்மையிலேயே என்.95 மாஸ்க்குகளா அல்லது கே.என்.95 ரக மாஸ்க்குகளா... இவற்றுக்கு இந்திய தரக்கட்டுப்பாடு சோதனை நடத்தப்பட்டதா... அரசு விளக்கம் தருமா?

‘‘இறுதியாக, இனிவரும் காலங்களில் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் கொள்முதல் குறித்த விவரங்களை இக்கழகத்தின் வாயிலாகக் கேட்டறிந்து, வெளிப்படைத் தன்மையுடன் உண்மையான செய்திகளை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என்று திரு.உமாநாத் குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயமாக அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் கேட்டு வெளியிடுவதற்கு ஜூ.வி தயங்குவதே இல்லை. அதனால்தான் ஒவ்வொரு தடவையும் போன், எஸ் எம் எஸ், வாட்ஸ்அப், மெயில் என அனைத்து வழிகளிலும் தொடர்புகொள்ள முயல்கிறோம்.

நாம் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் அரசாணையில் குறிப்பிட்டிருப்பதும், நேர்மையான ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்டுள்ளதுமே ஆகும். நமது செய்தியில் சானிடைஸர் ஊழல், களப்பணியில் ஊழல், நியமனத்தில் ஊழல், உணவு சப்ளையில் ஊழல் எனப் பல ஊழல்களைக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், வகையாக என்.95 மாஸ்க், மூன்றடுக்கு மாஸ்க், பி.பி.இ கிட் குறித்து மட்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மற்றவை குறித்து அரசுத் தரப்பிலிருந்து விளக்கம் அளித்தால் வெளியிட தயாராகவே இருக்கிறோம்.