Published:Updated:

தேர்தல் 2021 : எலிமினேஷனா, எலெக்‌ஷன் பிரசாரமா?

மதுரை பிரசாரத்தில்
பிரீமியம் ஸ்டோரி
மதுரை பிரசாரத்தில்

வர்த்தக சங்க அரங்கில் ஏற்பாடு செய்திருந்த பெண்கள்-மாணவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டார். “புரட்சிக்கு வித்திட்ட நகரம் மதுரை.

தேர்தல் 2021 : எலிமினேஷனா, எலெக்‌ஷன் பிரசாரமா?

வர்த்தக சங்க அரங்கில் ஏற்பாடு செய்திருந்த பெண்கள்-மாணவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டார். “புரட்சிக்கு வித்திட்ட நகரம் மதுரை.

Published:Updated:
மதுரை பிரசாரத்தில்
பிரீமியம் ஸ்டோரி
மதுரை பிரசாரத்தில்
மல் தொடக்க விழா நடத்தித் தன் கட்சியின் பெயரை முதன்முதலில் அறிவித்தது மதுரையில்தான். 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக முதல் பிரசாரத்தைத் தொடங்கியிருப்பதும் மதுரையில்தான். அவர் பகுத்தறிவாளர் என்பதால் ராசி காரணமாக இருக்காது. மதுரையில் மய்யம் கொண்ட புயல் பயணத்தின் சில சுவாரஸ்யத் தருணங்கள்....

மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலத்தில் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற கோஷத்துடன் தேர்தல் பிரசாரப் பயணத்தைக் கடந்த 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடத்துவதாக கமல் அறிவித்தார். கொரோனா கால கட்டுப்பாடுகள் தொடர்வதால், பொது நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி அளிப்பதில்லை. என்றாலும், ஆளும்கட்சியினர் மட்டும் அதை மீறி அவ்வப்போது நிகழ்ச்சிகளை நடத்தி வருவதால், அந்த நம்பிக்கையில் மதுரையில் 6 இடங்களில் கமல் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டிருந்தார்கள்.

கமல்
கமல்

விண்ணப்பித்தபோது போலீஸ் ஒன்றும் சொல்லவில்லை. நிகழ்ச்சி நடத்த இருந்த 13-ம் தேதி காலை, பொதுப் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்தனர். தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடக்கும் நிகழ்ச்சிக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.

சென்னையிலிருந்து கிளம்பிக்கொண்டிருந்த கமலிடம் மதுரை நிர்வாகிகள் இதைத் தெரிவித்தவுடன், அவர் அப்செட்டானார். ‘பரவாயில்லை, என்னுடைய நிகழ்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை’ என்று கிளம்பி மதுரை வந்து சேர்ந்தார்.

மதுரை பிரசாரத்தில்
மதுரை பிரசாரத்தில்

அப்செட்டாக வந்தவரை விமான நிலையத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் படை சவுண்ட் விட்டே உற்சாகப்படுத்தியது. ‘ஆண்டவரே’, ‘நம்மவரே’, ‘உலக நாயகனே’, ‘பிக்பாஸே’, ‘பரமக்குடியாரே!’ என்று கூட்டம் குரல் எழுப்ப, அதைப் பார்த்து உற்சாகமாகிவிட்டார். “கைத்தட்டலோடு விட்டு விடாதீர்கள்... கைதூக்கி விடுங்கள்!” என்று பஞ்ச் பேசினார். திறந்த வாகனத்தில் ஏறி நின்று தொண்டர்களுக்குக் கையசைத்தபடி உலக நாயகனின் தென்பாண்டி சீமையிலே பயணம் தொடங்கியது.

தேர்தல் 2021 : எலிமினேஷனா, எலெக்‌ஷன் பிரசாரமா?

அரசியல் தலைவராக கமலைப் பார்க்க வராமல், பிக்பாஸ் ஹவுஸ் ஓனராக கமலைப் பார்க்க மக்கள் திரண்டு வந்தார்கள். “ஆத்தி... ஆளு என்னா சேப்பு!” என்று கிசுகிசுத்ததைக் கேட்க முடிந்தது. ‘இன்னிக்கு எலிமினேஷனை வெச்சுக்கிட்டு எப்படி பறந்து வந்தாரு?’ என்று குழப்பமானது கோரிப்பாளையம் கோமதி அக்கா.

வர்த்தக சங்க அரங்கில் ஏற்பாடு செய்திருந்த பெண்கள்-மாணவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டார். “புரட்சிக்கு வித்திட்ட நகரம் மதுரை. மதுரையை 2-ம் தலைநகராக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கனவு. எம்.ஜி.ஆரின் நீட்சியான நான் அதை நிறைவேற்றுவேன்!” என்றவர் திடீர் டி.ஆர் ஆனார். “ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு. மே மாதத்தில் கயவர்களுடன் மல்லுக்கட்டு!” என்று அடித்த பஞ்ச்-க்கு எதிர்பார்த்ததைவிட செம ரெஸ்பான்ஸ்.

“தலைவா, ‘விக்ரம்’ டீஸர் சூப்பர்!” என்ற குரல் எல்லாம் அங்கு கேட்டது. நல்லவேளை அஜீத் ரசிகர்கள் போல் அப்டேட் கேட்கவில்லை.

கமல்
கமல்

கூட்டத்திலிருந்து ஒருவர், “தலைவரே... நீங்க டக்குனு களத்துக்கு வந்துட்டீங்க. உங்க ப்ரெண்ட் ரஜினி எத்தனையோ வருஷமா ஆரம்பிக்கிறேன்னு சொல்லிச் சொல்லியே டபாய்ச்சு இப்ப போயி ஆரம்பிச்சிருக்காரு... நீங்க அவருகூட கூட்டணி போட்ராதீங்க!” என்றார் கொஞ்சம் சத்தமாகவே.

“ஐயாயிரம் ரூபாயைத் தேர்தல் நேரத்தில் கொடுத்தால் மக்கள் வாங்கத்தான் செய்வார்கள். அதை முறியடித்தே ஆகவேண்டும். உங்களுக்கு வரவேண்டியது ஐயாயிரம் அல்ல, ஐந்து லட்சம் என்று அவர்களிடம் கூற வேண்டும். இந்தப் பணம் அரசு கஜானாவிலிருந்து வர வேண்டியது அல்ல. வெளிநாடுகளில் இருபதாயிரம் கோடி, முப்பதாயிரம் கோடி எனப் பதுக்கி வைத்துள்ளார்களே, அவர்கள் தர வேண்டியது. துன்பப்படும் மக்களை நான் பார்த்துவிட்டு இறந்தால் எனக்கு நல்ல சாவு கிடைக்காது. ஐந்து வயதிலிருந்து என்னை நன்றாக வாழ வைத்த மக்களுக்குக் கண்டிப்பாக நல்லது செய்வேன்!” என்று பேசிக்கொண்டே போக, மேடையிலிருந்த நிர்வாகி ஒருவர், மொபைலில் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடலை ரிங் டோனாக அலறவிட்டு சிரிக்க வைத்தார். பின் கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினரோடு புகைப்படம் எடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார். குழந்தைகளை கன்னம் கிள்ளி நலம் விசாரித்தார்.

“தேர்தலில் போட்டியிடும்போது அப்பகுதி பிரச்னைகளைப் பட்டியல் போட்டு, அவற்றை நிறைவேற்றித் தருவதாகக் கையொப்பமிட்டு வீடுகளில் கொடுக்க வேண்டும்” என்ற யோசனையைக் கடைசியாக கமல் சொல்லிவிட்டுக் கிளம்ப... குழப்பமாகத் தலையாட்டி வைத்தனர் நிர்வாகிகள்.