Published:Updated:

கோவை: பள்ளியைவிட்டு விலகியும் டார்ச்சர்; மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி

கோவையில் 12-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

கோவை, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்தார். அங்கு இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றிவரும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.

பள்ளி மாணவி தற்கொலை
பள்ளி மாணவி தற்கொலை
`மக்களைக் காப்பாற்ற அங்கேயே நின்றேன்' - மனநலம் குன்றியவரால் எலும்பு முறிந்த கோவை போலீஸ்காரர்

ஆசிரியர் மிதுன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததால், அந்த மாணவி பள்ளியைவிட்டு வெளியேறி, அதே பகுதியில் உள்ள வேறு ஓர் அரசுப் பள்ளியில் சேர்ந்தார். இந்த நிலையில், பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு, திடீரென தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். அந்தக் கடிதத்தில், மாணவி தன் சாவுக்குச் சிலர் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். போலீஸார், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அந்தக் கடிதத்தையும், மாணவியின் செல்போனையும் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினார்கள். இதற்கிடையில், குற்றம்சாட்டப்படும் ஆசிரியர் மிதுன் மீது அதே பள்ளியில் படிக்கும் மாணவிகள் இன்னும் சிலர் புகார் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

மாணவியின் மரணம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், மாணவியின் மரணம் தொடர்பாக நம்மிடம் பேசிய அவரின் தந்தை, ``என் மகள் படிப்பில் சிறந்தவர். தொடர்ந்து முதல் ரேங்க் எடுத்துவந்தார். ஆனால், மிதுன் சக்கரவர்த்தி அவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துவந்தார். இது தொடர்பாக என் மகள் புகார் கொடுத்தும் பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்தரிப்புப் படம்

அதனால், வேறு பள்ளியில் சேர்த்தோம். இந்தக் காரணங்களால் என் மகள் மன உளைச்சலிலிருந்தார். மிதுன் சார் டார்ச்சரால்தான் அவர் இப்படிச் செய்துவிட்டார்" என்று கதறினார்.

`யாரையும் சும்மாவிடக் கூடாது’ ; பாலியல் தொந்தரவு?! - தற்கொலை செய்துகொண்ட கோவைச் சிறுமி எழுதிய கடிதம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாணவியின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, அவரின் மரணத்துக்கு நீதி வேண்டியும், பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அனைத்து முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள் கலெக்டர் அலுவலகம் முன்பும், சின்மயா பள்ளியை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகைப் போராட்டம்
முற்றுகைப் போராட்டம்

இந்த நிலையில், போலீஸார் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கைதுசெய்து சிறையில் அடைந்திருக்கின்றனர். மாணவிக்கு மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது.

மாணவியின் செல்போனைப் பறிமுதல் செய்திருக்கும் போலீஸார், அவர் யாரிடமெல்லாம் பேசினார் என்று விசாரித்துவருகின்றனர். முக்கியமாக, மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும், ரித்துவின் தாத்தா, எலிசா சாருவின் அப்பா யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு