Published:Updated:

` எது சரியோ, அதைப் பேசுவதற்கு பயப்பட மாட்டேன்!' -அரசு கொறடாவுக்கு எதிராகச் சீறும் குன்னம் எம்.எல்.ஏ.

kunnam mla ramachandran

``நான் அம்மாவிடம் அரசியல் பயின்றவன் எனக்கு எது சரியென்று படுகிறதோ அதைப் பேசக்கூடியவன். நான் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை'' என்கிறார் குன்னம் எம்.எல்.ஏ.

` எது சரியோ, அதைப் பேசுவதற்கு பயப்பட மாட்டேன்!' -அரசு கொறடாவுக்கு எதிராகச் சீறும் குன்னம் எம்.எல்.ஏ.

``நான் அம்மாவிடம் அரசியல் பயின்றவன் எனக்கு எது சரியென்று படுகிறதோ அதைப் பேசக்கூடியவன். நான் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை'' என்கிறார் குன்னம் எம்.எல்.ஏ.

Published:Updated:
kunnam mla ramachandran

``சட்டப்பேரவை ஆய்வுக்குழுக் கூட்டத்துக்கு முறையாக அழைப்பு தரவில்லை. இந்தக் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளலாமா வேண்டாமா?" என அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் முன்னிலையில், குன்னம் எம்.எல்.ஏ பேசிய விவகாரம் அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

mla ramachandran
mla ramachandran

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுவினரின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்குழுவின் தலைவரும் அரசுக் கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் பங்கேற்றார். இதில் கலந்துகொள்ள வந்த குன்னம் அ.தி.மு.க எம்.எல்.ஏ ராமச்சந்திரன், ``இந்தக் கூட்டம் தொடர்பாக எனக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. தொகுதிக்கு உட்பட்ட செந்துறை, அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. நான் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாமா, வேண்டாமா" என்று பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முறையாக அழைப்பு விடுக்கப்படாததால், இக்கூட்டத்தைவிட்டு வெளியேறத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை எதிர்பார்க்காத அரசு கொறடா, அவரை சமாதானப்படுத்தி ஆய்வுக் கூட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

thamarai rajendran MLA
thamarai rajendran MLA

`குன்னம் எம்.எல்.ஏ-வைப் புறக்கணிக்க என்ன காரணம்?' என்று அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். ``அவர் தொடர்ந்து அ.தி.மு.க-வுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார். முதன் முதலில் அ.தி.மு.க இரு அணிகளாகப் பிளவுபட்டபோது கூவத்தூரில் எங்களை யாரும் அடைத்துவைக்கவில்லை. நாங்கள் சுதந்தரமாக இருக்கிறோம்" என்று வெளிப்படையாக முதன்முதலில் மீடியாக்கள் முன்பு பேட்டி கொடுத்தவர் இதே ராமச்சந்திரன்தான். அடுத்த சில நாள்களிலேயே ``வாரிசு அரசியல் நடத்துகிறார் சசிகலா. ஆட்சிக்கும் கட்சிக்கும் தினகரன் தலைமைப் பொறுப்பை ஏற்கக் கூடாது" என்று பகிரங்கமாக அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அத்தோடு, ``அ.தி.மு.க ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். தற்போது நடைபெறும் அ.தி.மு.க ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்" என்று அதிரடியாகப் பேசினார். மேலும், கடந்த மாதத்தில்கூட, `ஒற்றைத்தலைமை வேண்டும்' என்ற ராஜன் செல்லாப்பாவின் கருத்தை வரவேற்றுப் பேசினார். இந்தி எதிர்ப்பு குறித்து தனது கருத்தைப் பதிவு செய்தார். தொடர்ந்து அ.தி.மு.க-வுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருவதால், கொறடா உட்பட பலரும் இவரைப் புறக்கணிக்கிறார்கள்" என்கின்றனர்.

mla ramachandran
mla ramachandran

இதுகுறித்து குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி ராமச்சந்திரனிடம் பேசினோம். ``என்னுடைய தொகுதியில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன. எனது மக்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளன என்று என்னிடம் சொல்ல வேண்டாமா. எம்.எல்.ஏ-க்கள் கூடும் கூட்டத்தில் எனக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை. அதனால்தான் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்று கேட்டேன். இது தவறா. நான் ஜெயலலிதாவிடம் அரசியல் பயின்றவன். எனக்கு எது சரியென்றுபடுகிறதோ அதைப் பேசக்கூடியவன். நான் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை'' என்று போனைத் துண்டித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism