Published:Updated:

`சண்டைக்குப் போகவும் கூடாது, துணைபோகவும் கூடாது!’ - தொண்டர்களுக்கு மம்தா ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸின் வாக்கு வங்கி 43 சதவிகிதமாகவும் பா.ஜ.கவுக்கு 40 சதவிகிதமாகவும் உள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வின் வாக்கு வங்கி 23% அதிகரித்துள்ளது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நிலவி வருகிறது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவும் தேர்தலின் போதும் பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க
பா.ஜ.க

இந்நிலையில் வரும் 2021-ம் ஆண்டு அந்த மாநிலம், சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கவுள்ளதால் தன் கட்சி தொண்டர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடு மற்றும் ஆலோசனை வழங்கியுள்ளார் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி.

Vikatan

கொல்கத்தாவில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கட்சியின் பிற தலைவர்களுடன் மம்தா பானர்ஜி ஆலோசனையில் ஈடுபட்டார். அந்தக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ்
திரிணாமுல் காங்கிரஸ்

மம்தாவின் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாகப் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள், `` 2021-ம் ஆண்டு வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என மம்தா எங்களிடம் கூறினார். தொடர்ந்து, எங்கள் கட்சி தொண்டர்கள் யாரும் மோதல், வன்முறை போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்றும் வேறு கட்சியினர் மோதலில் ஈடுபட்டால் அவர்களுக்குத் துணையாகவோ அல்லது எதிராகவோ செயல்படக் கூடாது எனவும் தெரிவித்தார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்துத் தலைவர் முதல் எம்.எம்.ஏ-க்கள் வரை யாரெல்லாம் பா.ஜ.கவுடன் தொடர்பில் உள்ளனரோ அவர்களின் பட்டியலை விரைந்து தயாரிக்க வலியுறுத்தினார். கட்சித் தலைவர்கள் அனைவரும் சர்ச்சையான கருத்துகளை ஊடகங்களில் பேசக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார் மம்தா பானர்ஜி” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலையும் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் பா.ஜ.கவின் வளர்ச்சி சற்று அதிகமாகவே உள்ளது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது எனத் தற்போதிலிருந்தே சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டார் மம்தா பானர்ஜி.