Published:Updated:

மூழ்கிப்போன மதுரை! - ஸ்மார்ட் சிட்டி பரிதாபங்கள்...

ஸ்மார்ட் சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி வேலைகள் இன்னும் முழுமையடையவில்லை. வடிகால் பகுதிகளில் எங்கெங்கு அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றித் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறோம்.

மூழ்கிப்போன மதுரை! - ஸ்மார்ட் சிட்டி பரிதாபங்கள்...

ஸ்மார்ட் சிட்டி வேலைகள் இன்னும் முழுமையடையவில்லை. வடிகால் பகுதிகளில் எங்கெங்கு அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றித் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறோம்.

Published:Updated:
ஸ்மார்ட் சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்மார்ட் சிட்டி

“எங்களுக்கு ஸ்மார்ட் சிட்டியே வேண்டாம்... பழைய சிட்டியே போதும்” என்று புலம்பும் நிலைக்கு வந்துவிட்டார்கள் மதுரை மக்கள்!

கடந்த ஜூலை 30, 31-ம் தேதிகளில் பெய்த மழையில், மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள், ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட மதுரை மாநகரின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் மூழ்கிப்போனதற்குக் காரணமே ஸ்மார்ட் சிட்டிக்காக செய்யப்பட்ட அரைகுறை வேலைகள்தான் என்கிறார்கள் மதுரைவாசிகள்.

மூழ்கிப்போன மதுரை! - ஸ்மார்ட் சிட்டி பரிதாபங்கள்...
மூழ்கிப்போன மதுரை! - ஸ்மார்ட் சிட்டி பரிதாபங்கள்...

கடந்த அ.தி.மு.க ஆட்சியில், மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் மதுரையில் 1,892 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்றுவந்தன. ஆனால், இந்தப் பணிகள் அனைத்தும் முறையான திட்டமிடலின்றி, தரமற்ற முறையில் நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும், எம்.பி சு.வெங்கடேசனும் இது குறித்துப் பலமுறை அறிக்கை வெளியிட்டனர். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, ‘ஸ்மார்ட் சிட்டி ஊழல்’ குறித்து விசாரிக்க டேவிதார் ஐ.ஏ.எஸ் தலைமையில், ஒரு நபர் விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது. ஆட்சி மாறிய பிறகும் காட்சி மாறவில்லை என்பதுதான் சோகம்.

இது குறித்து நம்மிடம் பேசிய நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர் வைகை ராஜன், “எவ்வளவு மழை பெய்தாலும், பெரிதாகப் பாதிக்கப்படாதவாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் மதுரை. ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாசி வீதிகளை உயர்த்தி சிமென்ட் ரோடு போட்டதால், மழைநீர் ஆற்றுக்குச் செல்லும் பாதைகள் அடைபட்டுவிட்டன. அதேபோல வைகையின் இரு கரைகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சாலைகளும் மழைநீர் ஆற்றுக்குள் வருவதைத் தடுக்கும் அணைபோல மாறிவிட்டது. எனவேதான் லேசாக மழை தூறினாலே ரயில் நிலையம், பேருந்து நிலையப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கிவிடுகின்றன. இரண்டு நாள் மழைக்கே இந்த நிலை என்றால், அடுத்து வரும் பருவமழைக் காலத்தில் எப்படித் தாங்கப்போகிறதோ மதுரை...’’ என்றார் வருத்தத்துடன்.

வைகை ராஜன்
வைகை ராஜன்
சிம்ரன்ஜித் சிங் கலோன்
சிம்ரன்ஜித் சிங் கலோன்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங் கலோனிடம் கேட்டபோது, “ஸ்மார்ட் சிட்டி வேலைகள் இன்னும் முழுமையடையவில்லை. வடிகால் பகுதிகளில் எங்கெங்கு அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றித் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறோம். அடுத்த மழையின்போது, தண்ணீர் சாலைகளில் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்துவருகிறோம். தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்த நவீன இயந்திரங்கள் வாங்கவிருக்கிறோம். எங்கெல்லாம் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தரமற்று இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களின் செலவிலேயே சரிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறோம்’’ என்றார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைச் சரிசெய்ய, இன்னொரு திட்டம் போட வேண்டும்போல!