Election bannerElection banner
Published:Updated:

``மோடி தாடிதான் வளர்கிறது, நாடு வளரவில்லை’’ - மம்தா பானர்ஜி ஆவேசம்

மம்தா பானர்ஜி - மோடி
மம்தா பானர்ஜி - மோடி

`மோடி ஒரு நாள் இந்த நாட்டையும் விற்றுவிட்டு, அதற்கும் தன் பெயரை வைத்துவிடுவார்’ என மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரையில் கடுமையான விமர்சனம்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை, கடுமையாகத் தாக்கி பரப்புரையில் ஈடுபட்டுவருகிறது பா.ஜ.க. மம்தா பானர்ஜியும் பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தி பதிலடி கொடுத்துவருகிறார். பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்தும் தேர்தல் பரப்புரையில் பேசிவருகிறார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

அந்த வகையில் நேற்று நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மம்தா, `` மோடி ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி சரிந்துவிட்டது. ஆனால், மோடி தனது தாடியை மட்டும் வளர்த்துக்கொண்டிருக்கிறார். சில நேரங்களில் அவர் காந்திக்கும், தாகூருக்கும் மேலாகத் தன்னை நினைத்துக்கொள்வார். சில நேரம் தன்னை சுவாமி விவேகானந்தாவாக கருதிக்கொள்வார்.

ஸ்டேடியத்துக்குத் தன் பெயரைச் சூட்டிக்கொள்வார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்குக் கொடுக்கப்படும் சான்றிதழில் தன் படத்தை அச்சடித்துக்கொள்வார். விண்வெளிக்குத் தனது படத்தை அனுப்ப இஸ்ரோ மூலம் முயல்வார். ஒரு நாள் இந்த நாட்டையும் விற்றுவிட்டு, அதற்கும் தன் பெயரை வைத்துவிடுவார். பா.ஜ.க-வினர் மூளையில் ஏதோ கோளாறு இருக்கிறது. ஸ்க்ரூ ஏதோ லூசாகியிருக்கலாம்” என்றார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
File Photo

மேலும், `` இந்தியாவிலேயே மிகப்பெரும் ஃபிராடு கட்சி பா.ஜ.க. அவர்கள் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற, ஒடிசா, உத்தரப்பிரதேச மாநிலங்களிலிருந்து குண்டர்களை அழைத்து வந்திருக்கின்றனர். அவர்கள் உங்கள் வீட்டுக்கு வந்து பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கும்படி மிரட்டுவார்கள். தாய்மார்கள் துடைப்பம், பாத்திரங்களைக் கொண்டு அவர்களை அடித்து விரட்டுங்கள். நந்திகிராமில் ஒடிசாவைச் சேர்ந்த சில குண்டர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். நான், நந்திகிராமில் வாக்குப்பதிவு முடியும் வரை அங்கேயேதான் இருப்பேன். வாக்களிப்பதோடு உங்கள் பணி முடியவில்லை, திரிணாமுல் தொண்டர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களையும் பாதுகாக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு