Published:Updated:

``இதுவரைக்கும் பாதுகாப்பா இருக்கோம், ஆனா..." - உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நெல்லை மாணவர்!

உக்ரைன் நாட்டில் சிக்கிய மருத்துவ மாணவர் மனோ

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அங்கு மருத்துவக் கல்வி கற்பதற்காகச் சென்றுள்ள நெல்லையைச் சேர்ந்த மாணவர் உள்ளிட்ட தமிழக மாணவர்கள் பலர் சிக்கியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

``இதுவரைக்கும் பாதுகாப்பா இருக்கோம், ஆனா..." - உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நெல்லை மாணவர்!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அங்கு மருத்துவக் கல்வி கற்பதற்காகச் சென்றுள்ள நெல்லையைச் சேர்ந்த மாணவர் உள்ளிட்ட தமிழக மாணவர்கள் பலர் சிக்கியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:
உக்ரைன் நாட்டில் சிக்கிய மருத்துவ மாணவர் மனோ

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது. இந்த போர் காரணமாக ஆசிய நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. உக்ரைன் நாட்டின் விமான நிலையங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுமழை பொழிவதால் கல்வி மற்றும் தொழிலுக்காக அங்கு சென்றுள்ள இந்தியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மாணவர் மனோ ஜெபதுரையின் குடும்பத்தினர்
மாணவர் மனோ ஜெபதுரையின் குடும்பத்தினர்

உக்ரைன் நாட்டின் கார்கிவ் என்ற இடத்தில் இயங்கிவரும் கார்கிவ் சர்வதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துக் கல்வி கற்பதற்காக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மனோ ஜெபதுரை சென்றுள்ளார். தற்போது அங்கு போர் நடப்பதால் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் அவர் தவித்து வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உக்ரைன் நாட்டில் இருக்கும் மாணவர் மனோ ஜெபதுரையிடம் தொலைபேசியில் பேசுகையில், ``எனக்கு இந்த ஆண்டு தான் இங்குள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இங்கு வந்தேன். இந்த பல்கலைக்கழகத்தில் 2,000-க்கும் அதிகமானோர் படிக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

வீடியோ கால் மூலம் தாயிடம் பேசும் மாணவர் மனோ ஜெபதுரை
வீடியோ கால் மூலம் தாயிடம் பேசும் மாணவர் மனோ ஜெபதுரை

தமிழகத்தைச் சேர்ந்த பலரும் இங்கு படிக்கிறார்கள். பாளையங்கோட்டையில் இருந்து இன்னும் மூன்று மாணவிகளும் படிக்கிறார்கள். நாங்கள் முதலாம் ஆண்டு படிக்கிறோம். பல்கலைக்கழகத்தில் பாடங்கள் நடந்துவந்ததால் நாங்கள் இந்தியாவுக்கு திரும்பாமல் இருந்தோம். இப்போது போர் முழுவீச்சில் நடப்பதால் எங்களால் நாடு திரும்பமுடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாங்கள் இருக்கும் பகுதி முழுவதும் குடியிருப்பு பகுதி மற்றும் கல்வி நிலையங்கள் உள்ள இடம் என்பதால் இங்கு தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும், இன்று (24-ம் தேதி) காலையில் நாங்கள் இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் குண்டு சத்தம் கேட்டது. அதனால் பயம் ஏற்பட்டது.

நிலைமை மோசமடைவதற்குள் என்னைப் போல இங்கே சிக்கியவர்களை மீட்க வேண்டும்
மனோ ஜெபதுரை, உக்ரைன் மாணவர்

நாங்கள் இருக்கும் இடத்தில் இதுவரை மின் இணைப்பு முழுமையாக இருக்கிறது. உணவுப் பொருள்களும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வருகின்றன. ஆனாலும் நிலைமை மோசமடைவதற்குள் என்னைப் போல இங்கே சிக்கிக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்கள் அனைவரையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மாணவர் மனோ ஜெபதுரையின் தந்தை சேகர் செல்வின்துரை ஆங்கில ஆசிரியராக உள்ளார். பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளியான அவர் மருதகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர் தன் மகன் குறித்து கவலை அடைந்துள்ளார்.

சோகத்தில் மாணவரின் பெற்றோர் மற்றும் சகோதரிகள்
சோகத்தில் மாணவரின் பெற்றோர் மற்றும் சகோதரிகள்

இது குறித்து நம்மிடம் பேசிய அவர், ``என் மகனிடம் இன்று பேசியபோது நன்றாக இருப்பதாகச் சொன்னான். ஆனாலும் அவன் இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் குண்டு வெடித்த சத்தம் கேட்டதாகச் சொன்னதும் எங்களுக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. அவன் இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்தான். உடைமைகளை தயாராக வைத்திருக்குமாறு தூதரக அதிகாரிகள் சொல்லியிருப்பதாகத் தெரிவித்தான். அங்கிருக்கும் மாணவர்களை அரசு பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

மாணவர் மனோ ஜெபதுரையின் தாய் அமுதா சகோதரிகள் மிஸ்பா ஹெலன், மில்கா ஜெசிகா ஆகியோரும் உக்ரைன் நாட்டில் நிலவும் சூழ்நிலையால் கவலை அடைந்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism