Published:Updated:

லாக் டெளன் 4.0; தடைகளும் தளர்வுகளும்..! - மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் என்னென்ன?

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு ( vikatan )

மத்திய உள்துறை அமைச்சகம் லாக்டெளன் 4.0 தொடர்பான வழிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச்24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்று நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில் அதனை தற்போது மே 31-ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. லாக்டெளன் 4.0 இருக்கும் ஆனால் அது முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என கடந்த சில பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். லாக்டெளன் சில தளர்வுகளுடன் நீடிக்கப்படும் என்பதை மோடி முன்பே திட்டவட்டமாக கூறியிருந்தார். மத்திய உள்துறை அமைச்சகமானது லாக்டெளன் 4.0 தொடர்பான வழிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

லாக் டெளன் 4.0 - தொடரும் தடைகள்:

  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைக்கான தடை தொடரும். மருத்துவ சேவை, ஏர் ஆம்புலன்ஸ், பாதுகாப்பு தேவைகள் அல்லது உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பயணங்களுக்கு இந்தத் தடை இல்லை.

  • மெட்ரோ ரயில் சேவைகளுக்குத் தடை.

  • பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

  • உணவகங்களில் டோர் டெலிவரிக்கு மட்டுமே அனுமதி.

மே 31...25 மாவட்டங்களுக்குத் தளர்வு! -  தமிழகத்தில் லாக் டௌன் 4.0; வரைமுறைகள் மற்றும் தளர்வுகள்
  • திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்களில் தடை தொடரும். விளையாட்டரங்கு, ஸ்டேடியம் திறந்து கொள்ள அனுமதி. அதேநேரம் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

  • அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

பொதுப் போக்குவரத்து
பொதுப் போக்குவரத்து

லாக் டெளன் 4.0 போக்குவரத்து இயக்கம்:

  • பேருந்து பொதுப் போக்குவரத்தை துவங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்.

  • மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இரு மாநில சம்மதத்துடன் இயக்கலாம்.

  • மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி போக்குவரத்து இயக்கம் இருக்க வேண்டும்.

லாக்டெளன் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்:

  • லாக்டெளன் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் , சிவப்பு,ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.

  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

  • கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு, வீட்டுக்கு வீடு ஆய்வு.

  • இந்த பகுதிகளில் இருந்து யாரும் வெளியேறவோ அல்லது உள்ளே வருவதற்கோ அனுமதி கிடையாது.

 பாலம்
பாலம்

லாக்டெளன் 4.0 இரவு நேரங்களில் தொடரும் தடை

  • இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

  • 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு

லாக்டெளன் தளர்வுகள்

  • மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் நடமாட்டத்தைத் தடுக்கக் கூடாது

  • சரக்கு வாகனங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே வந்து செல்ல தடை இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு