Published:Updated:

தேர்தல் பிரசாரத்தில் திடீரென மயங்கி விழுந்தார்!- மருத்துவமனையில் கடம்பூர் ராஜு அனுமதி

நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கடம்பூர் ராஜுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடம்பூர் ராஜு
கடம்பூர் ராஜு

நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேரடிப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள், தொகுதியில் முகாமிட்டுத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Kadambur Raju
Kadambur Raju

அமைச்சர்களுக்கு குறிப்பிட்ட சில கிராமங்கள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அவர்கள் அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்துத் தாங்கியபடியே தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். உள்ளூரைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்களின் துணையுடன் அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் பிரசாரம் செய்கிறார்கள்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு களக்காடு பகுதியில் உள்ள வார்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவர் அங்குள்ள கட்சியினரின் உதவியுடன் தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திப்பது, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு உதவிகளைச் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

``உள்ளாட்சித் தேர்தலைத் தடுக்க வழி தேடுகிறார் ஸ்டாலின்!” - அமைச்சர் கடம்பூர் ராஜு
களக்காடு பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது அமைச்சர் கடம்பூர் ராஜு மயக்கமடைந்தார்.
அ.தி.மு.க தொண்டர்கள்

அவர் இன்று வழக்கமான வகையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. பிரசாரத்தின்போது அவர் மயங்கிச் சரிந்ததால் அதிர்ச்சியடைந்த கட்சியினர் அவரை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் கடம்பூர் ராஜுவின் உடல்நிலையைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதைக் கண்டுபிடித்தனர். அதனால் அவரை ஓய்வெடுக்கப் பரிந்துரை செய்த மருத்துவர்கள், அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகிறார்கள்.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் கடம்பூர் ராஜுவை அமைச்சர் செல்லூர் ராஜு மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். அத்துடன், மருத்துவர்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். ஓய்வுக்குப் பின்னர் கடம்பூர் ராஜு விரைவில் குணமடைந்து மீண்டும் பிரசாரத்துக்குச் செல்வார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.