Published:Updated:

`திராவிட இயக்கத்தில் மலர்ந்த ஆன்மிக மலர்தான் அ.தி.மு.க!'- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

minister rajendra balaji
minister rajendra balaji ( ஆர்.எம்.முத்துராஜ் )

``கலைஞருக்குப் பின் ஸ்டாலின். ஸ்டாலினுக்குப் பின் உதயநிதி. உதயநிதிக்குப் பின் அவரது மகன். தி.மு.க ஒரு ஜமீன் கட்சி” என்கிறார் ராஜேந்திர பாலாஜி.

அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,

minister rajendra balaji
minister rajendra balaji

`` தி.மு.க தலைமைக்கு அண்ணாவைப் பற்றிப் பேச துளியும் தகுதி கிடையாது. காங்கிரஸ் கட்சிக்காரர்களைவிட அண்ணாவை மோசமாகத் திட்டியவர் கருணாநிதி. அ.தி.மு.க-வுக்குத்தான் அண்ணாவைப் பற்றிப் பேசும் தகுதி உண்டு.

ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மமதையில் நாங்கள் இருந்ததால்தான் வேலூர் தொகுதியில் தோல்வியடைந்தோம். கே.வி.குப்பத்தில் கொஞ்சம் வேலை செய்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். தங்களுக்கு பதவி கிடைக்கும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடியைப் பிடித்து ஓட்டு கேட்கும் கூட்டம்தான் அ.தி.மு.க.

minister rajendra balaji
minister rajendra balaji

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 20 பேரை ஸ்டாலின் விலை கொடுத்து வாங்க நினைத்தால் நாங்கள் 60 தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வாங்குவோம். திராவிட இயக்கத்தில் மலர்ந்த ஆன்மிக மலர்தான் அ.தி.மு.க. முதலமைச்சர் சீட்டுக்கு ஸ்டாலின் ஆசைப்படக்கூடாது. பிறக்கும் போதே அண்ணாவின் கொடியுடன் பிறப்பவர்கள் உள்ள கட்சி அ.தி.மு.க. நாங்கள் சேர்க்காதவர்கள்தான் தி.மு.க-வில் சேருகிறார்கள். கலைஞருக்குப் பின் ஸ்டாலின். ஸ்டாலினுக்குப் பின் உதயநிதி. உதயநிதிக்குப் பின் அவரது மகன். தி.மு.க ஒரு ஜமீன் கட்சி” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு