Published:Updated:

`என் மகளுக்கு இந்த நிலை வந்திருந்தால்..!' -கோவை மாணவி பெற்றோரிடம் உறுதியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோவை மாணவி வீட்டில் அமைச்சர்கள்
கோவை மாணவி வீட்டில் அமைச்சர்கள்

பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட கோவை மாணவியின் வீட்டுக்கு சென்ற அமைச்சர்கள், பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, பாலியல் வன்கொடுமை காரணமாக, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த, சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, மாணவி புகார் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். போலீஸார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்தரிப்புப் படம்
Tamil News Today: `கன்னியாகுமரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு!' - சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில், அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி ஆகியோர் மாணவி வீட்டுக்குச் சென்று அவர் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவியின் உறவினர்களிடம் ஆதரவாக பேசிவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, ``இதை ஏதோ தனிப்பட்ட இழப்பாக பார்க்கவில்லை. என் சொந்த மகள் இந்த நிலைமைக்கு ஆளாகியிருந்தால், எப்படிப்பட்ட இழப்பாக பார்ப்பேனோ அப்படிதான் இங்கு வந்திருக்கிறேன்.

அமைச்சர்கள்
அமைச்சர்கள்

இதற்காக நீதி விசாரணை சரியான வழியில் நடக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், காவல்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அரசுப்பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு செய்து வருகிறோம். அதை தனியார் பள்ளிக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கில், யார் தவறு செய்திருந்தாலும் உரிய தண்டனை வாங்கித்தரப்படும். மாணவர்களுக்கு ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் பெற்றோர், ஆசிரியர், நண்பர்களிடம் சொல்ல முடியாத பிரச்னைகளை '14417' என்ற எண்ணில் தொடர்புகொண்டு உதவி மையத்துக்கு தெரிவிக்கலாம்.

மகேஷ் பொய்யாமொழி
மகேஷ் பொய்யாமொழி

அதற்கென பயிற்சி பெற்ற அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள். பெண் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. மாணவி எழுதி வைத்த கடிதம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவி குடும்பத்துக்கு இழப்பீடு, அரசு வேலை வாய்ப்பு போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வோம்" என்றார்.

`பழிபோட்ட ஆசிரியர்... கண்டு கொள்ளாத பள்ளி?!’ - கோவை மாணவி தற்கொலையின் அதிர்ச்சிப் பின்னணி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு