Published:Updated:

6 மாதத்தில் 400 பேரால் பாலியல் வன்கொடுமை - வேலை தேடிச்சென்ற இடத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( சித்தரிப்புப் படம் )

மகாராஷ்டிராவில் சிறுமி ஒருவரை போலீஸ் அதிகாரி உட்பட 400 பேர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் தாயார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பின்னர், அந்த சிறுமிக்கு அவர் தந்தை திருமணம் செய்து வைத்தார். ஆனால் அந்த சிறுமியோ தன் மாமனாரின் சித்ரவதை காரணமாக, திருமணமான ஒரே ஆண்டில் தந்தையின் வீட்டுக்கு வந்துவிட்டார். அதையடுத்து, குடும்ப வறுமையின் காரணமாக அங்கிருந்து வேலை தேடி அம்பேஜெகோய் என்ற நகரத்துக்குச் அந்த சிறுமி சென்றார். அங்கு வேலைதேடிப் பல இடங்களில் அலைந்து திரிந்த அந்த சிறுமியிடம், வேலை வாங்கிக்கொடுப்பதாகக் கூறி இரண்டு பேர் அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்தரிப்புப் படம்

அதைத் தொடர்ந்து, அந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த பலரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், மனமுடைந்து போன சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து, போலீஸில் புகார் அளித்தார். சிறுமி போலீஸாரிடம், தன்னை சுமார் 400 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்கள். விசாரணையில், போலீஸார் அதிகாரி ஒருவர் உட்பட 400 பேர் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார், தற்போது 4 பேரைக் கைது செய்திருக்கின்றனர்.

தொடர்ந்து, சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த தகவலறிந்து சிறுமியை மீட்ட மாநில குழந்தைகள் நல வாரிய உறுப்பினர்கள், அவருக்குக் கருவைக் கலைக்க உதவினார்கள். கடந்த மாதம், மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவலியில், சிறுமி ஒருவரைக் காதல் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி சுமார் 33 பேருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள், தற்போது சுமார் 400 பேர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குழந்தை, முதியவர் கொலை; மருமகள், பேத்தி பாலியல் வன்கொடுமை; நிலப்பிரச்னையால் நடந்த கொடூரம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு