Election bannerElection banner
Published:Updated:

மோடி: `தடுப்பூசி உற்பத்தியில் முழு தேசிய திறன்..!' - அவசரக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தற்போதைய கொரோனா பரவல் நிலைமையைக் கையாள எந்த அளவில் தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை ஆய்வு செய்தேன். மருந்துகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசி தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்தியாவில் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு கொரோனா பரவல் கடுமையாக இருக்கிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை கடந்து இருக்கும் நிலையிலும், தொடர்ந்து அதிகரித்து வருவது அனைவரையும் கவலை கொள்ள செய்திருக்கிறது. இது தவிர்த்து பல மாநிலங்களில் நோயாளிகள் படுப்பதற்கு படுக்கை வசதிகள் இல்லை, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு என வரும் புகார்கள் மக்களை மேலும் கலக்கமடைய செய்துள்ளது.

கொரோனா
கொரோனா

இந்த நிலையில் நேற்று இரவு மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார் பிரதமர் மோடி. இதில் கொரோனா தடுப்பு தொடர்பான பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது. குறிப்பாக, மாநிலங்கள் படுக்கை வசதிகளை அதிகரிப்பது, ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் உற்பத்தி குறித்து எல்லாம் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்புக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்து ஆய்வு செய்தார் மோடி. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி, ``பரிசோதனை செய்து அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை ட்ராக் செய்வது, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, இந்த முறை சிகிச்சைக்கு வேறு மாற்று இல்லை” என்றார். மேலும், கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகளை அதிகப்படுத்த உத்தரவிட்டார்.

மோடி
மோடி

நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தி, அதன் விநியோகத்தை முறைப்படுத்தவும் உத்தரவிட்டார். மேலும் தடுப்பூசி உற்பத்தியின் திறனை அதிகரிக்க, நாட்டில் இருக்கும் தேவையான வளங்களை கொண்டு முழு தேசிய திறனையும் பயன்படுத்த மோடி உத்தரவிட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. இது தவிர கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில், உருவாக்கப்பட்ட பி.எம் கேர்ஸ் நிதியில் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேசங்களில் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் நிறுவவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவசர ஆலோசனைக் கூட்டத்தை முடித்த பின்னர் கூட்டம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்தார் மோடி. அதில் அவர், ``தற்போதைய கொரோனா பரவல் நிலைமையைக் கையாள எந்த அளவில் தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை ஆய்வு செய்தேன். மருந்துகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசி தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நாம் செய்தது போலவே,கொரோனாவை இன்னும் அதிக வேகத்துடனும் ஒருங்கிணைப்புடனும் வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவோம்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு