Published:Updated:

`4 போஸ்டிங்தான்; ஆயிரக்கணக்கில் குவிந்த விண்ணப்பம்’- ஓ.ஏ,செக்யூரிட்டி பணிக்கு குவிந்த பட்டதாரிகள்

மதுரையில் குவிந்த பட்டதாரிகள்
மதுரையில் குவிந்த பட்டதாரிகள்

இரவு நேரக் காவலர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 4 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கில் ஆட்கள் குவிந்தனர். இதில் எம்.பி.ஏ மற்றும் பி.இ பட்டதாரிகளும் அடக்கம்.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பெரியகண்ணனூரைச் சேர்ந்த திருவராஜ் என்பவர் சிக்கினார். இதைத் தொடர்ந்து சித்தாண்டி, ஜெயக்குமார் என முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் லிஸ்ட் ஆக்டோபஸ் கரங்களாக விரிந்தது.

நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு

குருப்-4 மட்டும் அல்ல; குருப்- 2 மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வுகள் என்று எல்லா தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார் வாசிக்கப்பட்டு, பல முறைகேடுகள் நிரூபணமாகிவருகின்றன. இருந்தாலும், தற்போது வேலைவாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்ட காரணத்தால், பல பட்டதாரிகளுக்கு அரசு வேலைதான் இன்னும் கனவாக இருக்கிறது. நேற்று முன்தினம்கூட, மதுரை மாவட்டத்தில் இரவுக் காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் குவிந்தனர். அதில் எம்.பி.ஏ மற்றும் பி.இ பட்டதாரிகளும் அடக்கம்.

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 3-இரவு நேரக் காவலர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் ஆகிய நான்கு பணிகளுக்காக, கடந்த 3-மாதங்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், கும்பகோணம், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எம்.பி.ஏ, எம்.சி.ஏ, பி.இ படித்த 1437 பட்டதாரிகள் நேற்று முன்தினம் மதுரையில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர்.

நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு

இதில் சிலர், உணவுகூட அருந்தாமல் அவசர அவசரமாக வந்து கலந்துகொண்டதால் கிரக்கம் அடைந்தனர். ஆட்கள் அதிகமாக இருந்ததால், நீண்ட நேரமாகக் காத்திருந்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர்.

இதில், தலா 1 பேட்ஜுக்கு 250 என்று 6 பேட்ஜ்களாகத் தேர்வு நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் மட்டும் குறிப்பிட்ட 4-பணிகளுக்கு, பல்வேறு இடங்களிலிருந்து 1,437 பேர் கலந்து கொண்டனர். இந்தத் தேர்வுக்கு வந்த பெரும்பான்மையான நபர்கள் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தேர்வில் கலந்துகொண்டவர்கள், ``இரவுக் காவலர் பணி மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கான தேர்வில் 11 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், மதுரைக்கு மட்டும் 4 நபர்கள். ஆனால், இந்த 4 இடங்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வில் கலந்துகொண்டது அதிர்ச்சியாக இருக்கிறது.

நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு

வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இங்கு வந்தேன். இந்த கூட்டத்தைப் பார்த்தால், கண்டிப்பாக எனக்கு வேலை கிடைக்காது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது” என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு