Published:Updated:

`பச்சிளம் குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை!'- தாய் உட்பட 5 பேர்மீது போலீஸார் வழக்கு பதிவு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பச்சிளம் குழந்தை விற்பனை
பச்சிளம் குழந்தை விற்பனை ( சித்தரிப்புப் படம். )

மகாராஷ்டிராவில் இரண்டு மாதக் குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகர் மாவட்டம், ஷீரடி பகுதியைச் சேர்ந்தவர் சீதல் மோரே. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் மீண்டும் கர்ப்பம் தரித்திருக்கிறர். பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய குடும்பம் என்பதால், சீதல் மருத்துவச் செலவுக்குக்கூட பணமில்லாமல் தவித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் சீதல் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது, சிகிச்சைக்குப் பணமில்லாமல் பரிதவித்த சீதல் குடும்பத்துக்கு, அவரின் தோழி கல்பனா என்பவர் ரூ.8,500 கொடுத்து உதவினார். செப்டம்பர் மாதம் குழந்தை பிறந்தது. நிதி நெருக்கடியில் பச்சிளம் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைத்து நின்றிருக்கிறார் சீதல். அப்போது, சீதலின் தோழி கல்பனா, ``உங்கள் குடும்பம் நிதி நெருக்கடியிலிருந்து விடுபட வேண்டுமானால், புதிதாகப் பிறந்த குழந்தையை விற்பனை செய்தாக வேண்டும்" என்று ஆலோசனை கூறியிருக்கிறார்.

குழந்தை விற்பனை.
குழந்தை விற்பனை.
சித்தரிப்புப் படம்

அதை சீதலும் ஏற்றுக்கொண்டார். அதையடுத்து, சீதலையும், அவர் குழந்தையையும் மும்பை கல்யாண் பகுதிக்கு கல்பனா அழைத்துச் சென்றார். அங்கு, லட்சுமி, இந்து ஆகிய இருவரை சீதலிடம் அறிமுகம் செய்துவைத்தார். அவர்கள் குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து கொடுப்பதாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, அனைவரும் சேர்ந்து குழந்தையை தீபக் என்பவருக்கு விற்பனை செய்தனர். ஆனால் கல்பனா ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டு, சீதலிடம் வெறும் 40,000 மட்டுமே கொடுத்திருக்கிறார். இதனால்தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீதல், இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இது குறித்து விசாரித்தபோது, சீதல் பணத்துக்கு ஆசைப்பட்டு தன் குழந்தையை விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து, சீதல், கல்பனா, இந்து, லட்சுமி, தீபக் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், குழந்தையைப் பணம் கொடுத்து வாங்கிய தீபக், உத்தரப்பிரதேசம் சென்றுவிட்டார். அவரை போலீஸார் தொடர்புகொண்டு பேசியதை அடுத்து, அவர் விரைவில் குழந்தையுடன் மும்பை வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

பச்சிளம் குழந்தை தத்து கொடுக்கப்பட்ட விவகாரம்; இடைக்கால தடை விதித்த கேரள நீதிமன்றம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு