Published:Updated:

``குழந்தைகள் மீதான வன்முறைகள்… எந்தச்சூழலிலும் மீண்டும் பணியாற்ற வாய்ப்பு வழங்கக்கூடாது" - கனிமொழி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மருதூர் அணையை பார்வையிட்ட கனிமொழி
மருதூர் அணையை பார்வையிட்ட கனிமொழி

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளியில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், பல்வேறு பகுதிகளில் இது தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு வாரக் காலமாகத் தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கடந்த ஒரு வாரக் காலமாகப் பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதனால், நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பாபநாசம், சேர்வலாறு அணையில் நீர்வரத்து அதிகமாகியிருக்கிறது. தொடர்ந்து கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மருதூர் அணை ஆய்வு
மருதூர் அணை ஆய்வு

பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து நேற்றிரவு 15 ஆயிரம் கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த நீர் இன்றைய நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தடுப்பணையான மருதூர் தடுப்பணையில் 5 ஆயிரம் கன அடிக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மருதூர் தடுப்பணையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார்.

ஊழலில் உடையும் தடுப்பணை! - அமைதி காக்கும் தி.மு.க... கொந்தளிக்கும் விவசாயிகள்...

தடுப்பணையைத் தாண்டிச் செல்லும் மேலக்கால், கீழக்கால் பகுதிகளில் திறந்து விடப்பட்டிருக்கும் தண்ணீர் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டோர் உடனிருந்தனர். தடுப்பணையில் ஆய்வு செய்து விட்டு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கனிமொழி, ``பாபநாசம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவதால், தாமிரபரணி ஆற்றில் நேற்றைய தினம் தண்ணீர் அதிகமாகத் திறந்து விடப்பட்டிருக்கிறது.

மருதூர் அணை ஆய்வு
மருதூர் அணை ஆய்வு

இந்த வெள்ள நீர் புன்னக்காயல் வரை செல்லும். எனவே பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடவோ, விளையாடவோ மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஆற்றின் கரையோரம் இருப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

`இதுக்கு மேல என்னன்னு சொல்றது?' - மீண்டும் உடைந்த தளவானூர் தடுப்பணை; வேதனையில் விவசாயிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த வருடம் போல் இல்லாமல் குறைவான அளவிலேயே தண்ணீர் வருகிறது. தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வருடம் தோறும் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைச் சேமிக்க மழைக்காலம் முடிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மருதூர் தடுப்பணை ஆய்வுக்கு முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள மணக்கரையில் கனமழையால் சேதமடைந்திருக்கும் பாலத்தைக் கனிமொழி ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு விரைவில் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொதுமக்களிடம் உறுதி அளித்தார். அப்போது, அவரிடம் கோவை மாணவி தற்கொலை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மருதூர் அணை ஆய்வு
மருதூர் அணை ஆய்வு

அதற்குப் பதிலளித்தவர், ``பெற்றோர்கள் குழந்தைகள் பள்ளியில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், பல்வேறு பகுதிகளில் இது தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆசிரியர்கள் தவறு செய்தாலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அதை மூடி மறைக்கிறது. மாணவர்களை மிரட்டுவதும், சமாதானப்படுத்துவதும் மட்டுமே நிர்வாகத்தின் போக்காக இருக்கிறது.

தவறு செய்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் பள்ளி நிர்வாகங்கள் எடுப்பதில்லை. கோவையில் நடந்த சம்பவமும் அதுபோலத் தான். தவறு செய்தவர் மீது பள்ளி நிர்வாகம், காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தால் அந்த மாணவியின் உயிர் போயிருக்காது. இது போன்ற கல்வி நிறுவனங்கள் மீது கண்டிப்பாகத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் மீதான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கென தனியாக ரெக்கார்டு உருவாக்கி, ஒரு முறை புகார் வந்தால் அவர்கள் மீண்டும் குழந்தைகளுடன் இணைந்து பணியாற்ற எந்தவித வாய்ப்பையும் நாம் வழங்கக்கூடாது. சட்டத்தையும் கடுமையாக்க வேண்டும்.

மருதூர் அணை ஆய்வு
மருதூர் அணை ஆய்வு

இதை நான் ஏற்கெனவே, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கிறேன். பலருக்குக் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளிப்பதற்குக் கூட வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே சென்றாலும், அங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும், நீதிமன்றங்களில் வழக்கும் முடிவதில்லை. பாதிக்கப்பட்டிருப்பது குழந்தைகள். எனவே, அவர்களின் மன உளைச்சலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

`என் மகளுக்கு இந்த நிலை வந்திருந்தால்..!' -கோவை மாணவி பெற்றோரிடம் உறுதியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு