Published:Updated:

ஜம்மு - காஷ்மீர் பணியிலிருந்து ராஜினாமா! - ஓய்வுபெற்ற ஐபிஎஸ் விஜயகுமாருக்குப் புதிய பதவி?

ஜம்மு - காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகர் பதவியில் இருந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு மத்திய அரசு புதிய பதவியை வழங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகுமார்
விஜயகுமார்

ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கவர்னராக சத்ய பால் மாலிக் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆலோசகர்களாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஸ்கந்தன், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மூவர் என ஐந்து பேர் பதவி ஏற்றனர். மொத்தமுள்ள அரசுத்துறைகளை ஐவரும் பிரித்துக்கொண்டு நிர்வாகப் பணியைக் கவனித்துவந்தனர்.

குட்பை டு காஷ்மீர்: கவர்னர் ஆலோசகர்கள் விஜயகுமார், ஸ்கந்தன் திடீர் ராஜினாமா?
விஜயகுமார்
விஜயகுமார்

காஷ்மீர் தீவிரவாதிகள் தொடர்பான விவகாரங்களை விஜயகுமார் ஐபிஎஸ் கவனித்து வந்தார். இவர்களின் பதவிக்காலம், வருகிற அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. கவர்னர் ஆட்சி முடிந்து நவம்பர் 1-ம் தேதி துணைநிலை கவர்னர்களாக இருவர் புதிதாகப் பதவியேற்க உள்ளனர்.

புதிய மினி தொடர்: இரும்புத்திரை காஷ்மீர்! - “உயிருக்கு உத்தரவாதமில்லை... உடனே கிளம்புங்கள்”

காஷ்மீர் மாநில கவர்னரின் அட்வைஸரான விஜயகுமார், அடுத்த துணை நிலை ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை கவர்னராக கிரீஷ் சந்திர முர்மு, லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை கவர்னராக ஆர்.கே. மாத்தூர் ஆகிய இருவரை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், விஜயகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் கடந்த சில நாள்களாக எழுந்த சர்ச்சைக்கு விஜயகுமார் ஐபிஎஸ் தனது ட்விட்டர் பதிவு மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்.

தனது ட்விட்டர் பதிவில், ``எனது ராஜினாமா தொடர்பான யூகங்களை தயவு செய்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஆலோசகராக எனது பதவிக்காலம் முடிவடைகிறது. இந்தப் பதவிக்காலத்தில் எனக்கு நல்ல நினைவுகளை வழங்கிய முன்னாள் கவர்னர், சக ஆலோசகர்கள், செயலர்கள், காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு எனது வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். மத்திய உள்துறையின் சீனியர் செக்யூரிட்டி அட்வைஸர் (தீவிரவாதம்) என்கிற புதிய பதவியில் விஜயகுமார் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இரும்புத்திரை காஷ்மீர்! - “மயானம்போல மாறிப்போச்சு சாப், எங்க மண்ணு!”