Published:Updated:

நீலகிரி: `2 நாள்களுக்கு அதிக மழை எச்சரிக்கை; தயார்நிலையில் அரசு இயந்திரங்கள்!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆபத்தான யூகலிப்டஸ் மரங்களை  அகற்ற வலியுறுத்தும் மக்கள்
ஆபத்தான யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வலியுறுத்தும் மக்கள்

அனைத்துத் துறைப் பணியாளர்களையும் சேர்த்து சுமார் 3,000 பேர் களத்தில் இருக்கிறார்கள். 450 மீட்பு முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

நீலகிரியைப் பொறுத்தவரை ஊட்டி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் தென்மேற்குப் பருவமழையும், குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர் சாரல் மழை பெய்துவருகிறது. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளாக 84 இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில்15 இடங்கள் மிக அதிக பேரிடர் பகுதிகளாகவும், 23 இடங்கள் உயர் பேரிடர் பகுதிகளாகவும், 20 நடுத்தர பாதிப்பு பகுதிகளாகவும், 26 குறைந்த பாதிப்பு பகுதிளாககவும் பிரித்து, கண்காணித்துவருகின்றனர்.

சேதமடைந்த வீடுகள்
சேதமடைந்த வீடுகள்

குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை, காற்று காரணமாக அவ்வப்போது சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தும், சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டும் வருகின்றன. இந்த நிலையில், குன்னூர் அருகிலுள்ள வண்டிச்சோலை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிவந்த மகேஸ்வரி என்பவர், பள்ளியிலிருந்து நேற்று மாலை வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது யூகலிப்டஸ் மரம் ஒன்று அவர்மீது முறிந்து விழுந்தது. அதில் அவர் பலத்த காயமடைந்தார். அதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பாம்பேகேசில் பகுதியில் குடியிருப்பு ஒன்று, கருங்கல் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இன்றும் நாளையும் நீலகிரியில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால்,அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

நீலகிரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் பேசிய மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், ``நீலகிரியில் தைல மரங்களும், சீகை மரங்களும் ஒரு சில இடங்களில் முறிந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்திவருகின்றன. மக்கள் நடமாடும் பகுதிகளில் அபாயகரமான மரங்களை அகற்ற மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு வரும் வரை காத்திராமல், அந்தந்த வட்டாட்சியர்கள் முடிவெடுக்கத் தற்காலிகமாகப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.


யூகலிப்டஸ் மரங்கள்
யூகலிப்டஸ் மரங்கள்

நீலகிரியில் இன்றும் நாளையும் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்திவருகிறோம். அனைத்துத் துறை பணியாளர்களையும் சேர்த்து சுமார் 3,000 பேர் களத்தில் இருக்கிறார்கள். 450 மீட்பு முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர, கால்நடைகளை மீட்கவும் ஆறு சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.

நீலகிரி: மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டுயானை; துண்டு துண்டாக வெட்டிப் புதைத்த கொடூரம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு