Published:Updated:

``இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 41.5 கோடி குறைந்திருக்கிறது!" - ஐ.நா

இந்தியாவின் 90 சதவிகித ஏழைகள் கிராமப்புறங்களிலும், 10 சதவிகித ஏழைகள் நகர்ப்புறங்களிலும் வாழ்கின்றனர்.

``இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 41.5 கோடி குறைந்திருக்கிறது!" - ஐ.நா

இந்தியாவின் 90 சதவிகித ஏழைகள் கிராமப்புறங்களிலும், 10 சதவிகித ஏழைகள் நகர்ப்புறங்களிலும் வாழ்கின்றனர்.

Published:Updated:

சர்வதேச வறுமை ஒழிப்பு தினமான இன்று(அக்டோபர் 17), `இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 41.5 கோடி குறைந்திருக்கிறது' என ஐ.நா அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதோடு, இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் என்று இந்தியாவை, ஐ.நா பாராட்டியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம்(UNDP), ஆக்ஸ்ஃபோர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி (OPHI) அமைப்புடன் இணைந்து Multidimensional Poverty Index-ஆல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

ஐ.நா
ஐ.நா

இந்த அறிக்கையில், `111 நாடுகளில், 1.2 பில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். இவர்களில் பாதிபேர், அதாவது 593 மில்லியன் பேர் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள். இதில் அதிக எண்ணிக்கையிலான ஏழை மக்களைக்கொண்ட வளர்ந்துவரும் பகுதியாகத் துணை-சஹாரா ஆப்பிரிக்கா இருக்கிறது. அதற்கடுத்த இடத்தில் தெற்காசியா இருக்கிறது' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வறுமை
வறுமை

இந்த அறிக்கையின்படி, 2005-06 - 2019-21 ஆண்டுகளுக்கிடையில், இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை 41.5 கோடி குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தியாவின் 90 சதவிகித ஏழைகள் கிராமப்புறங்களிலும், 10 சதவிகித ஏழைகள் நகர்ப்புறங்களிலும் வாழ்கின்றனர் என்றும் அறிக்கைத் தெரிவிக்கிறது.

இந்தியா
இந்தியா

அதுமட்டுமல்லாமல் நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான மாநிலமாக பீகார் தொடர்வதாகவும், உணவு மற்றும் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அறிக்கை கூறுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட, 2022-ம் ஆண்டுக்கான உலகப் பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்திய 107-வது இடத்தைப் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.