Published:Updated:

``என்னையும் கைது பண்ணுங்க'' - தொடர்ந்து மோடி அரசைச் சீண்டும் நடிகை ஓவியா; இப்போது என்ன பிரச்னை?

ஏற்கெனவே மோடிக்கு எதிராக ட்வீட் செய்ததற்காக, ஓவியாமீது காவல்துறையில் பா.ஜ.க-வினர் புகார் அளித்திருந்தனர். தற்போது மீண்டும் மோடி அரசுக்கு எதிராக ட்வீட் செய்திருக்கிறார் ஓவியா... என்ன ட்வீட்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஓவியா. `பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு ஓரிரு படங்களில் மட்டுமே நடித்தவர், ட்விட்டரில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்துவந்தார்.

மோடி எப்போது தமிழகம் வந்தாலும், #GoBackModi ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்கும். கடந்த பிப்ரவரி மாதத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக மோடி தமிழகம் வந்தபோதும், இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. அப்போது நடிகை ஓவியாவும் இந்த ஹேஷ்டேக்கைப் பதிவிட்டிருந்தார். இதற்காக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஓவியாமீது புகார் அளித்தனர் தமிழக பா.ஜ.க-வினர்.

அதன் பிறகு, கடந்த மாதம் தனது ரசிகர்களுடன் ட்விட்டர் வழியாக உரையாடினார் ஓவியா. அப்போது, ``மோடி அரசின் நடவடிக்கைகள் குறித்துச் சொல்லுங்கள்'' என்று ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு ஓவியா, ``என்ன பண்றது சார்... எல்லாம் சிரிப்பா இருக்கு'' என்று அவர் `பிக் பாஸி’ல் பேசிய வசனத்தை மீம் வடிவில் ஷேர் செய்திருந்தார். இதை ரசிகர்கள் பலரும் ரீட்வீட் செய்தனர். தற்போது மீண்டும் மோடி அரசுக்கு எதிராக ஓவியா பதிவிட்ட ட்வீட் வைரலாகிவருகிறது.

டெல்லியில் பல்வேறு இடங்களில் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ​அந்த போஸ்டரில், ``மோடி ஜி, எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தீர்கள்?'' என்று கேள்வியெழுப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த போஸ்டர் விவகாரத்தில் சுமார் 25 பேரைக் கைதுசெய்தது டெல்லி போலீஸ். இதில் பெரும்பாலானவர்கள் போஸ்டர் ஒட்டும் கூலித் தொழிலாளிகள் என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது.

டெல்லி போஸ்டர்கள்
டெல்லி போஸ்டர்கள்
Vikatan

இந்தநிலையில், கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக #ArrestMeToo என்கிற ஹேஷ்டேக் கொண்டு பலரும் ட்விட்டரில் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். நடிகை ஓவியாவும் தன் பங்குக்கு, ``இது ஜனநாயகம்தானா?'' என்று கேள்வியெழுப்பியதோடு ``என்னையும் கைதுசெய்யுங்கள்'' என்ற பொருளிலான #ArrestMeToo ஹேஷ்டேக்கையும் பதிவு செய்திருந்தார்.

Oviya
Oviya
இந்தப் பதிவின் கமென்ட் செக்‌ஷனில், பா.ஜ.க-வினர் சிலர் ஓவியாவுக்கு எதிராகக் கொந்தளிக்க, நெட்டிசன்கள் பலரும் ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்து ஹார்ட்டின்களைப் பறக்கவிட்டிருக்கின்றனர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு