Published:Updated:

``ஜி.டி.பி-யைப்போல மகிழ்ச்சியும் முக்கியம்!"- குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி

எம்.குமரேசன்

`மகிழ்ச்சிக்கு முதல் அடிப்படை தரமான கல்வி'

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

ஜி.டி.பி-யைப்போல மக்களின் மகிழ்ச்சியும் முக்கியம் என்று டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா எழுதிய `ஷிர்க்ஷா' என்ற புத்தகத்தை பிரணாப் முகர்ஜி வெளியிட்டுப் பேசுகையில், ``உலகமே ஜி.டி.பி பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறது. ஜி.டி.பி அதிகமாக வேண்டுமென்று நினைக்கிறது. ஆனால், ஜி.டி.பி-யைப்போல மக்களின் மகிழ்ச்சியும் முக்கியம்.

மகிழ்ச்சிக்கு முதல் அடிப்படை தரமான கல்வி'' என்றார். டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா சாதாரண ஆசிரியர்களுக்காக, ஒரு கல்வி அமைச்சராகத் தன் அனுபவத்தைப் புத்தக வடிவில் வெளியிட்டதற்குப் பாராட்டுகளையும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். மாணவர்களை அதிகமாகக் கேள்விகள் கேட்க ஊக்கப்படுத்த வேண்டுமென்றும் பிரணாப் முகர்ஜி ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

விழாவில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``டெல்லியில் கல்வித் தரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதைக் கல்விப் புரட்சி என்றே சொல்ல வேண்டும். டெல்லியில் கல்விப் புரட்சி ஏற்பட பிரணாப் முகர்ஜி கொடுத்த அறிவுரைகளும் வழிநடத்தல்களும் உதவியாக இருந்தன.

அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி அரசுப் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. இதனால், தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர்களை பெற்றோர் அரசுப் பள்ளியில் சேர்ப்பது அதிகரித்துள்ளது. டெல்லியில் நடந்துவரும் இந்தக் கல்விப் புரட்சியை இந்தியா மட்டுமல்ல, உலகமே கவனித்து வருகிறது'' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.