Published:Updated:

``நோயிலிருந்து விடுபட கைதட்டுவதும், விளக்கேற்றுவதும் உதவுமா?’ எனக் கேள்வி எழுப்பினார்கள்!’ - பிரதமர் மோடி #LiveUpdates

பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!

22 Oct 2021 10 AM

``இந்திய மக்களின் உழைப்பில் உருவான பொருள்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” - மோடி

மோடி, ``இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள வல்லுநர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் நல்லவிதமாக கருத்து தெரிவித்துவருகிறார்கள். இன்று, இந்திய நிறுவனங்களுக்கு முதலீடு வருவது மட்டுமல்லாமல் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.

மோடி
மோடி

தொற்றுநோய்க்கு எதிரான நமது முதல் பாதுகாப்பு பொதுமக்களின் பங்கேற்பு. இதன் ஒரு பகுதியாக மக்கள் விளக்குகளை ஏற்றினார்கள், கைதட்டி ஒலி எழுப்பினார்கள். ``நோயிலிருந்து விடுபட இது நமக்கு உதவுமா?" என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். ஆனால் அது மருத்துவப் பணியாளர்களுக்கு உற்சாகத்தை வழங்கியது.

நாம் எங்கு பார்த்தாலும் இப்போது நம்பிக்கை மட்டுமே இருக்கிறது... முன்பு `இந்த நாட்டில், அந்த நாட்டில் உருவாக்கப்பட்ட’ என்ற வரிகள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று அனைவரும் 'மேட் இன் இந்தியா' பற்றிப் பேசுகிறார்கள். இந்திய மக்களின் உழைப்பில் உருவான பொருள்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போரின்போது கவசங்களை அணிவதைப் போன்று மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என்றார்.

22 Oct 2021 10 AM

``நமது தடுப்பூசித் திட்டத்தில் அச்சங்கள் இருந்தன...”

``நோயிலிருந்து விடுபட கைதட்டுவதும், விளக்கேற்றுவதும் உதவுமா?’ எனக் கேள்வி எழுப்பினார்கள்!’ - பிரதமர் மோடி #LiveUpdates

பிரதமர் மோடி, ``நமது தடுப்பூசித் திட்டத்தில் அச்சங்கள் இருந்தன. இங்கு அது எவ்வாறு செயல்படும் என்று இந்தியா குறித்தும்ம் பேசப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், மக்களின் உயிர்களைப் பாதுகாத்தன. இனியும் மக்களைப் பாதுகாக்கும். இந்தியாவின் முழுத் தடுப்பூசி திட்டமும் 'அறிவியல் சார்ந்த மற்றும் அறிவியல் அடிப்படையிலானது' என்ற உண்மையைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். இது முற்றிலும் அறிவியல் முறைகளை அடிப்படையாகக்கொண்டது.

`இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை மக்கள் வாங்குவதில் ஆர்வத்தை வளர்த்திருக்கிறோம்” என்றார்.

22 Oct 2021 10 AM

``முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பதைத் தவிர்த்தோம்”

மோடி
மோடி

பிரதமர் மோடி, ``அக்டோபர் 21 அன்று, இந்தியா 1 பில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகள் என்ற இலக்கை அடைந்தது. இந்தச் சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது. இந்தச் சாதனைக்காக ஒவ்வொரு குடிமகனையும் வாழ்த்துகிறேன். 100 கோடி தடுப்பூசிகள் வெறும் எண்கள் அல்ல, நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம். தடுப்பூசி செலுத்தத் தொடங்கியபோது முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பதைத் தவிர்த்தோம்.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்தின் மூலம் நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் இலவச தடுப்பூசி கிடைப்பதை அரசு உறுதி செய்தது" என்றார்.

22 Oct 2021 8 AM

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை!

மோடி
மோடி

இந்தியாவில் மெகா கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட ஒன்பது மாதங்களில் 100 கோடி டோஸ் என்கிற இமாலய இலக்கை எட்டியிருக்கிறது. 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த இந்தியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றவிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இன்றைய உரையில் வேறு ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு