Published:Updated:

``மக்கள் அனைவரும் வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்ற வேண்டும்!" - பிரதமர் மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி

``ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நமது வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்ற வேண்டும். அவ்வாறு கொடியை ஏற்றுவதன் மூலமாக இயக்கத்தை வலிமைப்படுத்த முடியும்." - பிரதமர் மோடி

``மக்கள் அனைவரும் வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்ற வேண்டும்!" - பிரதமர் மோடி வேண்டுகோள்

``ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நமது வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்ற வேண்டும். அவ்வாறு கொடியை ஏற்றுவதன் மூலமாக இயக்கத்தை வலிமைப்படுத்த முடியும்." - பிரதமர் மோடி

Published:Updated:
பிரதமர் மோடி

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதையொட்டி, `ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துவருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஜூலை 22-ம் தேதிக்கும், நமது வரலாற்றுக்கும் சிறப்பான பொருத்தம் இருக்கிறது. 1947-ம் ஆண்டு, ஜூலை 22-ம் தேதி மூவர்ணக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக நாம் போராடியபோது, மூவர்ணக்கொடி குறித்து கனவு கண்டவர்களின் துணிச்சல், முயற்சிகளை நாம் இன்று நினைவுகூர்கிறோம். அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றவும், அவர்கள் கனவு கண்ட இந்தியாவைக் கட்டி எழுப்பவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை வலியுறுத்துகிறேன்.

தேசியக்கொடி
தேசியக்கொடி

இந்த ஆண்டு நாம் 75-வது சுதந்திரன விழாவை கொண்டாடப்போகிறோம். இந்த நேரத்தில் நாம் மூவர்ணக்கொடி இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும். இதற்காக ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நமது வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்ற வேண்டும். அவ்வாறு கொடியை ஏற்றுவதன் மூலமாக இயக்கத்தை வலிமைப்படுத்த முடியும். இந்த மூவர்ணக்கொடி இயக்கம் நமது தொடர்பை ஆழமாக்க வைக்கும்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!